(Reading time: 16 - 32 minutes)

 இந்தக் கிழவன் சொல்வது, உண்மையா? தலைமுறை இடைவெளி அத்தனை பயங்கரமாகவா விரிசல் கண்டுவிட்டது?

 அன்றைய 'வாக்கிங்'கை கேன்சல் செய்துவிட்டு வீடு திரும்பினேன்.

 அவன் சொன்னது என் மனதை குடைந்தெடுத்தது!

 அவன் சொன்னதுதான் யதார்த்தமான நிலையா?

 அதை தெரிந்துகொள்ளாவிடில், என் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது!

 உடனடியாக செயலில் இறங்க, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தேன். இறைவனின் கருணையே கருணை!

 நாங்கள் வசித்த வீட்டின் சொந்தக்காரன், சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.

 கொண்டு வந்திருந்த இனிப்பை எங்களுக்கு வழங்கினார்.

 " என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க? உங்க பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா? ரொம்பநாளா தேடிக்கிட்டிருந்தீங்களே!"

 "அதை விடுங்க! நாம ஒருத்தனை பார்த்து வைச்சா, பொண்ணு வேறொருத்தனை அழைச்சிகிட்டு வந்து, 'இவன்தான் என் ஹஸ்பண்ட்'னு சொல்வா...'"

 " உண்மைதான். காலம் மாறிப்போச்சு! வேறென்ன காரணம், உங்க சந்தோஷத்துக்கு?"

 " நான் கோடீஸ்வரன் ஆயிட்டேன், திடீர்னு! எல்லாம் கடவுள் கருணை!"

 " அப்படியா! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!"

"என்ன விஷயம்னு சொல்றேன்......இந்த வீட்டை ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசி, அக்ரிமெண்டிலே கையெழுத்து போட்டாச்சு...."

 " அப்படியா! கை கொடுங்க! கங்கிராட்ஸ்! யாரந்த கிறுக்கன், இந்த பழைய வீட்டைப் போய், ஒரு கோடி ரூபா கொடுத்து வாங்கறான்..?"

 " அவனா கிறுக்கன்? ஒரு கோடி ரூபாயை கொடுத்து பத்து கோடி சம்பாதிக்கத்தான், வாங்கறான்........"

 " விவரமா சொல்லுங்க!"

 " வாங்கப்போறவன் யாருன்னு தெரிஞ்சா இன்னும் அதிகமா வாயை பிளப்பீங்க! இந்த வீடு அவனுக்கு தேவையில்லே, ஆனா இது எழும்பியிருக்கிற நிலம், மனை அவனுக்கு அவசியமா தேவைப்படுது, வீட்டை வாங்கிட்டு அதை உடனே இடித்துவிட்டு........"

 " முட்டாளா இருக்கானே, வாங்கற வீட்டை ஏன் இடிக்கப்போறான்?"

 " முட்டாள் அவனில்லே, நாமதான்! தினமும் அவனை தேடிப்போய், கூட்டம் கூட்டமாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.