(Reading time: 16 - 32 minutes)

பாருங்கள்:

 ' நீங்களும் அந்த சாக்கடை துர்நாற்றத்தில் சங்கடப்படுகிறீர்களே, அதை தடுத்து, சுத்தம் செய்ய ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டிருக்கிறீர்களா?'

 பதில் கூற அவர் அங்கு இருந்தால்தானே!

 அரசியல் கட்சி வேட்பாளர்கள் தரும் கைக்கூலியையும் கூசாமல் வாங்கிக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிற பொதுத் தேர்தலில் வாக்களிக்க, ஓட்டுச்சாவடிக்குப் போகாதவர்கள் பிறரை குற்றம் சொல்ல தகுதி உண்டா?

 " சார்! எப்படி இருக்கீங்க?"

 " நல்லாயிருக்கேன், நீங்க?"

 " சிட் ஃபண்ட் மோசடியிலே உங்களுக்கு லட்சக்கணக்கிலே நஷ்டம்னு கேள்விப்பட்டேன், எப்படி அதை தாங்கினீங்க?"

 " அதிக வட்டிக்கு ஆசைப்பட்டேன், மோசம் போனேன், இனி அப்படி பேராசைப்படக் கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன், காலம் கடந்து!"

 " இருந்தாலும், அவ்வளவு பணத்தை இழந்தது பெரிய அதிர்ச்சிதான்......."

 " அதிர்ச்சி யாருக்கு, உமக்கா,எனக்கா? வாழ்க்கையை சௌகரியமாக வாழ, ஆண்டவன் எனக்கு தந்த பணத்தை நான் என் சௌகரியங்களை பெருக்கிக் கொள்ளாமல், வட்டிக்கு ஆசைப்பட்டு சிட் ஃபண்டிலே போட்டேன். ஆண்டவன் அந்தப் பணம் எனக்கு தேவையில்லைனு திருப்பி எடுத்துக்கிட்டான், இதிலே என்ன அதிர்ச்சி? காலம் கடந்து தெளிவு பிறந்திருக்கு...."

 இன்று என்ன நடக்கிறதென, கூட இருந்து வேடிக்கை பாருங்க!

 என் வீட்டிலிருந்து நடேசன் பூங்காவுக்கு சென்று, அங்கு பத்து சுற்று நடந்துவிட்டு, வீடு திரும்பினால் இரண்டு கிலோ மீட்டர் நடந்ததாக ஆகிவிடும்.

 இதுவரை சாலையில் நடக்கும்போது, தலையை குனிந்துகொண்டு கடப்பேன். எவருடனும் பேசமாட்டேன். பேசுவதெல்லாம், பூங்காவில்தான்!

 இன்று என்னவோ தோன்றுகிறது, சாலையில் தலை நிமிர்ந்து இருபுறமும் பார்த்துக் கொண்டே செல்கிறேன்.

 காலை மணி ஏழு! அதற்குள் வீட்டுக்கு வீடு பால்பேக்கட் போடுபவர்கள், கறிகாய் விற்பவர்கள், பள்ளி செல்லும் சீருடையணிந்த குழந்தைகள், தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கடைகளுக்குச் செல்லும் வெளியூர் சிறுவர், சிறுமிகள், (ஆமாம், பள்ளிக்கு செல்லவேண்டிய பருவத்தில் வெளியூரிலிருந்து குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.