(Reading time: 20 - 40 minutes)

ஆனாலும் நீங்கள்தான் வென்றீர்கள்…”

ஏதோ மறைமுக திட்டம் இருக்கிறதுபோல

ஆம்என்றவள் புன்சிரிப்புடன் விளக்கினாள்.

ஆற்றங்கரையில் உங்களை பார்த்தபோதே புரிந்து கொண்டேன். நீங்கள்தான் என் தலைவன் என்றுநீங்கள் மணமுடிக்க கேட்டதும் தடுமாறி விட்டேன். களவொழுக்கம் என்பது என் வீட்டிற்கு பொருந்தாதுஎன் குல வழக்கத்தை மீற முடியாதல்லவா? அதனால்தான் வள்ளியிடம் சொல்லி விட்டேன். காரிகருப்பனையும் பற்றி விவரம் தெரிவித்தேன். நீங்களும் ஆயகுலத்தலைவரிடம் பயிற்சி பெற்றீர்கள். வெற்றி பெறுவீர்கள் என்று நம்பிக்கை இருந்ததுஆனாலும்…”

ஆனாலும்…”

என் முறை மாமன் எதுவும் சதி செய்து விடுவானோ என்று தோன்றியது. அதனால்தான் என்னுடைய கூந்தலை கட்டும் இழைகச்சையை (ரிப்பன்) உங்கள் மணிக்கட்டில் கட்ட செய்தேன். உங்களை நெருங்கும்போது கருப்பன் அதனை கண்டு கொள்வான் என்பது எனக்கு தெரியும். என்னுடைய கூந்தல் மணம் கொண்ட இழைகச்சை உங்கள் கைகளில் இருப்பதால் என் மனம் விரும்பியவர்  நீங்கள்தான் என்றும் புரிந்து கொண்டு பணிவான் என்று நினைத்தேன். அப்படியே நடந்து விட்டது

ஆ என்னவொரு திட்டம்? என் வீரத்திற்கு இழுக்கு…”

சரி அவ்வாறெனில் அடுத்த இந்திர விழாவரை காத்திருப்போம்

எதற்கு?”

மீண்டும் ஒருமுறை ஏறுதழுவி கருப்பனை அடக்கி உங்கள் வீரத்தை பறைசாற்றுங்கள். அதுவரை…”

அதுவரை…”

காத்திருங்கள்…”

அடடா, நான் ஒரு பேச்சிற்கு சொன்னேன். வீரத்தை ஏறுதழுவலில்தான் காட்ட வேண்டும் என்றில்லை. தென்பாளையத்தார் படையெடுத்து வரும்போதுகூட கடும் பகை எதிர்த்து வாகை சூடி உறுதிபடுத்தலாம்

ஏன் இந்த அவசர மாற்றம்?”

நீ சொன்ன காத்திருப்பு தான் காரணம். உனக்கு  நம்முடைய பழங்கதை நினைவில்லை போலும்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.