(Reading time: 20 - 40 minutes)

சற்று நேரத்தில் களத்தில் காரிகருப்பன் இறங்கும் அறிவிப்பும் வந்தது. தன்னை தெளிவுபடுத்திக் கொண்ட முகுந்தன் தன்னுடைய கனவையுகங்களாக நீண்டிருந்த காத்திருத்தலை முடித்து வைக்கும் முடிவுடன் மீண்டும் களம் புகுந்தான்.

முன்பைவிட சோர்வுற்றிருந்த முகுந்தனின் தோற்றம் சூழ இருந்தவர்களை கவலைக்குள்ளாக்கியது. அவர்களுடைய தலைவன் தோற்று விடுவானோ என்று அஞ்சினர்.

களம் புகுந்திருந்த காரிகருப்பனும் அதன் வழியில் வந்தவர்களை உத்வேகத்துடன் சாய்த்தும்… சிலரது குடலை கிழித்து மாலையாக போட்டுக் கொண்டும்…. அதனை எதிர்க்க பயந்து தரையில் உருண்டவர்களை குளம்பினால் மிதித்தும்வெறி கொண்டும் முகுந்தனை நோக்கி வந்தது. இருவரின் வேகமும் சீராக கடந்தபோது கருப்பனின் கொம்பு முகுந்தனின் கைகளில்…. அதன் விழிகளில் சிவப்பேறமுகுந்தனுக்கோ தோள்கள் வலிமை கொண்டு தினவுடன் நிமிரகால்களை தரையில் வலுவாக ஊன்றி  அவன் காளையை அடக்க முயற்சிக்ககாளையோ பின்னங்கால்களை வலுவுடன் சுண்டி அவனை குத்தி கொள்ள பாய்ந்தது.

சாதாரணமாக இருந்தால் அதனை எதிர் கொண்டிருப்பான். மணிகட்டில் அடிபட்டு மயக்கம் தெளிந்து வந்திருந்ததால் தாக்கு பிடிக்கும் சக்தியை அவன் இழந்து கொண்டிருந்தான். ஒன்று அவன் கருப்பனை வெற்றி கொள்ள வேண்டும் அல்லது அதனுடைய கொம்புகளை மார்பில் தாங்கி உயிர் பிரிய வேண்டும். இந்த முறையும் அவனுடைய காதல் கைகூடவில்லையெனில் இறப்பதுவே மேல்

இந்த போராட்டம் சில மணித்துளிகள் நீடித்தது. உச்சி வெயிலின் தாக்கம் முகுந்தனின் கண்களை இருள வைத்தது. இனி தோல்விதான் என்று அவன் தளர்ந்து போனான்.  விடாதே…  என்னை கொன்று விடு என்று அதனிடம் மெல்லிய குரலில் கோர ஆரம்பித்தான். ஆனாலும் அவனுடைய முயற்சியை கை விடவில்லை.

கொம்புகளை இறுக பற்றி இருந்த கைகள் வலுவிழக்க அவன் பிடி தளர்வதை புரிந்து கொண்ட கருப்பன் முழு முயற்சி எடுத்து அவனை கீழே தள்ளி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை சட்டென்று அவனிடம் பணிந்து போனது. அதனுடைய எதிர்ப்பு குறைவதை உணர்ந்த அவன் ஆணவத்துடன் அதை பிடித்து சாய்க்காமல்அதனுடைய திமில்களை தழுவி ஆற்றுபடுத்தினான். ஒரு  நட்பு பார்வை பார்த்த காரிகருப்பன் அவனுடன் பெருமையாக  நடந்து செண்பகம் இருந்த பரண் அருகே வந்தது.

விழாவின் தலைமையாளர் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து இருவரையும் மேடைக்கு வரவழைத்து மணமாலை சூட வைத்தார். தலைவனின் திருமணத்தை கண்ட அந்த ஊர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.