(Reading time: 20 - 40 minutes)

குலத்தில் அந்த மரபு கிடையாதுதான்… ஆனால் செண்பகம் ஒரு  ஆயர் மகள் ஆகி விட்டாள்அவள் ஒரு காளையை வளர்த்து வைத்திருக்கிறாள் எனும்போது அவன் மாடுபிடி வீரனாகத்தானே மாற வேண்டும்.

உண்மை சொல்லாமல் பல்வேறு விளக்கங்கள் அளித்தும் கோபாலனை சமாதானம் செய்ய முடியாமல் போனது. வெறுத்துபோய் உண்மையை சொல்லி விட்டான்.

அப்படி வா வழிக்கு…. உனக்கு நான் பல உத்திகளை கற்றுத் தருகிறேன். நீ இந்த ஊருக்கு தலைவன் என்பதாலோ உன் தந்தை பாளையத்தாரின் படையின் சேனாதிபதியாக இருந்தவர் என்றோ கற்றுத்தரவில்லை. ஒரு பெண்ணை விரும்புகிறாய். அவளை நேர்மையாக மணம் முடிக்க விரும்புகிறாய் என்பதால் மட்டும் கற்றுத் தருகிறேன்

அவர் சொல்லவும் முகுந்தனுக்கு நிம்மதி ஆகியது. அவன் பயந்ததுபோல  நடக்கவில்லை. அவர் அவனுடைய காதலை மதிக்கிறார்.

கோபாலன் உடனடியாக அவனுக்கு சில கட்டளைகள் இட்டார். உணவுப் பழக்கத்திலிருந்துதேகபயிற்சிவரை பல விதிகளை விதித்தார். முகுந்தன் உயரமாக இருப்பது  நல்ல விசயம் என்றாலும் ஏறுதழுவும்போது உடலை கனமாக வைத்திருக்கவும் தெரிய வேண்டும் காற்றில் பறக்கும் இறகுபோல மாற்றிக் கொள்ளவும் தெரிய வேண்டும். அப்போதுதான் காளையை லாகவமாக சமாளிக்க முடியும். பெரும்பான்மையான காளைகள் பிடிபட விரும்பாது. சரியான வீரனிடம் தோற்று போவதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ளும்.

காளையின் பாய்ச்சலுக்கு பயந்து தரையில் விழுந்து உருளும் வீரனை அது மதிக்காது. அதனுடைய கொம்பின் கூர்முனையினை தன் மார்பின் மீது ஏந்தும் வீரனைத்தான் அந்த காளை மட்டும் அல்லகளமும் விரும்பும். மாட்டின் கொம்பின் வலிமையை விட வீரனின் மார்பின் வலிமை பெரியது. ஏனெனில் அதன் உள்தான் பயமறியாமல் துடித்துக் கொண்டிருக்கும் இதயமும் இருக்கும். அதுதான் அதனுடைய தலைவிக்கு மங்களகரமான வாழ்க்கையை தரும்.

இப்படி பலப்பல செய்திகளை கூறி முகுந்தனின் உடலையும் உள்ளத்தையும் ஏறுதழுவலுக்கு தயாராக்கிக் கொண்டிருந்தார்.

இடையில் குமரன் ஒரு முயற்சி செய்தான். வள்ளியை செண்பகத்திடம் தூது அனுப்பினான். வள்ளியும் செண்பகத்திடம் சென்று முகுந்தனை பற்றி நல்ல பல விசயங்களை சொல்லி அவனுடைய விருப்பத்தினையும் எடுத்து சொன்னாள்.

அதை கேட்டு மென்சிரிப்பு சிரித்த செண்பகம்,

 “ தலைவனாக இருந்தால் என்னஅவர்தம் விருப்பம் தலையானதாக நான் எடுத்துக் கொள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.