(Reading time: 20 - 40 minutes)

சொல்லுங்கள்நினைவுபடுத்திக் கொள்கிறேன்

அந்த கதையில் நீ எனக்காக காத்திருந்தாய்மிக நீண்ட நாட்கள். எனக்காக தவம்கூட இருந்தாய்

பிறகு நீங்கள்  எனக்கு காட்சி தந்து…”

இல்லையில்லை.. கடைசிவரை நாம் இருவரும் இணையவேயில்லை. எனவே காத்திருத்தல் என்பதே இனி கூடாது என்று நினைக்கிறேன்

பொறுத்தார் பூமி ஆள்வார்…”

அது பூமிக்குநமக்கில்லை. நாம் இப்போது உடன்பாடு செய்து கொள்ளுவோம்

என்னவென்று?”

காத்திருத்தல் என்ற வார்த்தை இனி எப்போதும் நம் வாழ்வில் வரக்கூடாது. உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் உடனடியாக செய்வேன்அதேபோல நீயும்…”

அப்படியானால் அந்த இழைகச்சை விவகாரத்தை மன்னித்து விட்டீர்களா?”

உடனடியாக மன்னித்து விட்டேன். ஆயமகளாகிய நீ இத்தனை தடைகளையும் தாண்டி உன் குலப்பெருமையையும் காத்து கொண்டவனின் பெருமையையும் காத்து சிறந்து விட்டாய். எனவே உன் காதல்தான் சிறந்தது என்று ஒப்புக் கொள்கிறேன்

உங்கள் காதல்தான் சிறந்தது. கனவுபோல பல நினைவுகளை வைத்திருந்து என்னை கரை சேர்த்து விட்டீர்கள்.”

பல நினைவுகள் கனவுகளாக இருந்தன. இனி அவற்றை  நனவாக மாற்றுவோம். இப்போது நாம் நிலாவை பார்த்து வணங்கி வாழ்க்கையை தொடங்கலாமா?”

இருவரும் சாளரத்தின் வழியே தெரிந்த தண்ணிலவை பார்த்து ஆசி பெற்றனர்.

எனக்கு நம்முடைய பழங்கதையைபற்றி தெரிந்து கொள்ள விருப்பமாகிறது.”

சரிசரி முதல் விருப்பம்!.  உடனேயே நிறைவேற்றி வைக்கிறேன்.” சாளரத்தின் மேடை மீது அமர்ந்து அவர்களுடைய கதையை சொல்ல ஆரம்பித்தான்.

அது  நீண்ட பெரிய கதை… தெரிஞ்சுக்கணும்னா அப்படிக்கா போய் 'யானும் நீயும் எவ்வழி அறிதும்’ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

டியர் ரீடர்ஸ்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனபுடன்

சாகம்பரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.