(Reading time: 20 - 40 minutes)

கனவில்கூட கிடையாது போலிருக்கிறது.”

இரண்டாஒன்றுக்காவது கொடுப்பினை இருக்க வேண்டும் என்றுதான் இந்த ரகசிய திட்டம்

சரி முதலில் செண்பகத்தின் தோழனை பார்க்க வேண்டும். எப்படி பார்க்கலாம்

என்னை கேட்டால் நீ செண்பகத்தினை சம்மதிக்க வைத்தால் நல்லது. தோல்வி என்பது காதலில் வரக் கூடாது

என் வீரத்தைபற்றி குறைவாக எடைபோட்டு விட்டாய்.”

இல்லை இல்லை, என் வருங்கால தங்கையின் மீது ஊரில் சில பேருக்கு கண் உண்டு. அவர்களில் எவனாவது உன்னை முந்திக் கொண்டு காளையை அடக்கி விட்டால்….” 

அதனால் அவளை சந்தித்து முன்னுரிமை கோரச் சொல்கிறாய்

அப்படியில்லை, “

இந்த பிறவி எடுத்ததே செண்பகத்திற்காகத்தான் என்பது உண்மையானால்…  வரும் இந்திரவிழாவில் நடைபெறும் ஏறுதழுவலில் வெற்றி பெற்று அவளை மணமுடிப்பேன்

மிக நன்று. “ அவனிடம் விடைபெற்று குமரன் கிளம்பினாலும் நண்பனின் எதிர்காலத்தை நினைத்து கவலை வந்தது. இதுவரை யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத முகுந்தன் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறான். அவனுடைய எதிர்காலம் அவளுடன் உள்ளது என்பதை உறுதியாக நம்புகிறான். இதில் ஏதும் சிக்கல் வந்து விடுமோ?.

முகுந்தன் ஆற்றங்கரையிலிருந்து திரும்பி வந்த பின் சிந்தனையில் ஆழ்ந்தான். ஒருவேளை செண்பகத்தின் கரிய நிற காரியை அடக்க அவனுக்கு இப்போதிருக்கும் திறமை போதாதோ. வாள் வீச்சுமல்யுத்தம் போன்றவற்றை கற்று தெரிந்தாலும், ஏறுதழுவலை ஒரு விளையாட்டாகவே கற்றிருந்தான். இப்போதுதான் வாழ்க்கையாக பார்க்கிறான். இன்னும் பயிற்சியை அதிகரிக்க வேண்டும். அந்த ஊரிலேயே சிறந்த மாடுபிடி வீரர் ஆயர்குல தோன்றல் கோபாலனிடம் செல்லலாமா?

அவரை நாடி அவன் சென்றபோதுதான் புரிந்தது. ஏறுதழுவி.. தழுவிதொழுவுக்குள் (வாடிவாசல்) நிற்கும் காளையை போன்றே அவரும் பழக கடினமானவராக இருந்தார்.

தன்னுடைய குலம், மூத்தோர்கள் பெருமை, இப்போது அவன் வகிக்கும் தலைமை பதவிபற்றி அவன் விவரித்தும் அவர் நோக்காமல் நோக்கினார். (அதாவது அலட்சியம் காட்டினார்). ஏனெனில் அவருடைய ஒரேஒரு கேள்விக்கு அவனால் பதில் கூற முடியவில்லை.

வாளெடுத்து போரில் பாளையத்தாருக்கு தோள் கொடுத்து பங்கு பெரும் வீரனுக்கு ஏறுதழுவல் எதற்கு…? அது ஆயர் குல பழக்கம் அல்லவா?

அவரிடம் அவன் எப்படி சொல்ல முடியும்… காதலுக்கு குலமாவது இனமாவது…? அவனுடைய

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.