(Reading time: 20 - 40 minutes)

வேண்டும் என்பது கட்டாயமல்ல. இந்திரவிழாவில் எம் கருப்பனை ஏறுதழுவும் பொதுவனைத்தான்  நான் மணம் முடிப்பேன் என்று சொல்என்று தெளிவுபட சொன்னாள். இதற்குமேல் வள்ளியாலும் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று.

அதே சமயத்தில் செண்பகத்தின் உறவுகளிடையே சில திட்டங்கள் இருந்தன. அவர்களுக்கு முகுந்தனின் விருப்பம்பற்றியும் அவனுடைய முயற்சிபற்றியும் எப்படியோ தெரிந்து விட்டது.  ஊர் தலைவனின் தலைவியாக செண்பகம் மாறுவதை அவர்கள் விரும்பவில்லை. செண்பகத்தின் கருப்பனை முகுந்தன் அடக்கிவிடாமல் தடுக்க திட்டம் தீட்டினர்.

காளையின் கொம்புகளில் மூலிகைகள் கலந்த  நாரால் ஆன கயிற்றை கட்டுவது, அதன் உடல் பிடிபடா வண்ணம் வளவளப்பான கற்றாழை சாறை தடவுவதுதொழுவிற்குள் செல்லும் முன் கருப்பனுக்கு பனைமரத்து கள்ளை தருவதுஎன்று பல திட்டங்கள் தீட்டினர். (ம்நேர்மையாக வெற்றி கொள்வது என்பது இந்த கதையில் கிடையாது போல…)

முகுந்தன் ‘இவள் தான் என் வாழ்க்கை துணைவி!” என்று சொன்ன உள்ளுணர்வின் மீது நம்பிக்கை வைத்து ஏறுதழுவும் பயிற்சியை மேற்கொள்ள, முகுந்தனின் காதல் வெற்றிபெற தானும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று குமரன் சிந்திக்கசெண்பகம் தன்னுடைய கருப்பன்மீது நம்பிக்கை வைத்து காத்திருக்க நாட்கள் கடந்து போயின.

இந்திரவிழாவிற்கான அறிவிப்பு முரசு கொட்டி தெரிவிக்கப்பட்டது. தை திங்கள் முதல் நாள் கதிரவனுக்கும் குலதெய்வத்திற்கும் மழை தெய்வத்திற்கும் புது அரிசியில் பொங்கல் வைத்து நன்றி தெரிவிக்கவும்இரண்டாம் நாள் உழவனின் தோழனான காளைகளுக்கும் ஆயர்களின் குலதெய்வமான பசுக்களுக்கும் சிறப்பு செய்து வழிபடவும்மூன்றாம் நாளிலிருந்து வீரவிளையாட்டுகள்  நடத்தவும் அனுமதி தந்து பாளையத்துக்காரர் அறிவித்தார். ஊர் மக்கள் தை திங்களை புது வருட பிறப்பாக கொண்டு அதனை வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.

பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பிக்க, ஏறுதழுவும் நாளும் இந்திர விழாவிற்கு ஐந்தாம் நாள் ஒதுக்கப்பட்டது. காளைகளை அவிழ்த்து விடும் தொழு எனப்படும் திடல் பரண்களும் வேலியும் கொண்டு அமைக்கப்பட்டது.

இந்த சமயத்தில் ஊரில் இரண்டு விதமான கருத்துகள் மட்டுமே முதன்மை பெற்றன. அவர்களுடைய வீரம் மிக்க தலைவன் முகுந்தன் காரிகருப்பனை அடக்கி செண்பகத்தை மணம் முடிப்பான் என்றும், ஆயமகளான செண்பகத்தின் வளர்ப்பில் சீறி பாய்ந்து பழகியகொல்லேற்று கோடு – (கொலை வாள் போன்ற கொம்பு)’ உடைய கருப்பன் வெற்றி கொண்டு முகுந்தனை சாய்த்து செண்பகத்தின் மணமாலை கனவை தகர்க்கும் என்றும் வாதம் செய்ய

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.