(Reading time: 8 - 15 minutes)

 வந்தவர்கள் அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல், பெண்ணின் தந்தையிடம் ஒரு காசோலையை தந்தார்.

 அதை பார்த்த மணப்பெண்ணின் தந்தை திடுக்கிட்டார்.

 ரூபாய் இருபத்தைந்து லட்சத்துக்கு காசோலை!

 " என்ன .....என்ன...இது!"

 " இந்த திருமணம் நின்றுபோவதால், உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை நாங்கள் ஏற்பதுதானே நியாயம், தர்மம்? இந்தப் பணத்தை திரட்டத்தான், பத்து நாட்கள் தேவைப்பட்டது."

 இதுவரையில் மௌனமாயிருந்த மணப்பெண், குறுக்கிட்டாள்.

 " ஏன் திருமணம் நிற்கவேண்டும்? உங்க மகனுக்கு என்னை பிடிக்கவில்லையா?"

 " தெய்வமே!" என தன் காதுகளை பொத்திக்கொண்டார், மணமகனின் தந்தை!

 " பத்தரை மாற்றுத் தங்கம் உன்னை பிடிக்காமல் போவதா? கற்பனையில்கூட என் மகனோ, நாங்களோ, அப்படி நினைக்கமாட்டோம்மா!"

 " அப்படியானால், ஏன் திருமணம் நின்றுபோகவேண்டும்? ஊரைக்கூட்டி ஜாம் ஜாம்னு நடத்துவோம், காசோலையை திரும்ப பெற்றுக்கொண்டு வீட்டுக்கு திரும்பி, கல்யாண வேலையை கவனியுங்க, போங்க!"

 " தெய்வமே! இத்தனை அற்புதமான குணமுடைய பெண்ணுக்கு, ஒரு முடவனை கணவனாக்குவது, எங்கள் மனசாட்சி ஏற்காதும்மா! தயவுசெய்து எங்கள் வழியே நாங்கள் நடக்க அனுமதி கொடும்மா!"

 " உங்கள் முடிவுதான், உங்கள் மகனின் முடிவுமா?"

 " அவன்தாம்மா எங்களை இங்கு அனுப்பியதே!"

 " அவருக்கு நேர்ந்த இழப்பு, எனக்கு நேர்ந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்? என்னை கைவிட்டிருப்பாரா? இந்தக் கேள்வியை அவரிடம் நான் கேட்டு அவர் பதில் தந்தபிறகு, முடிவு செய்வோம். நானே உங்கள் வீடு வந்து, அவரிடம் கேட்கிறேன்......."

 " நீ அதற்காக எங்கள் வீடு தேடி வரவேண்டிய அவசியமில்லைம்மா! அவனும் எங்களுடன் வந்திருக்கிறான், அவனை வெளியே உட்கார்த்தி வைத்திருக்கிறோம், அவன் தாயுடன்!"

 மணப்பெண் பதறினாள்.

ஓடிப்போய், மணமகனையும் அவன் தாயையும் உள்ளே அழைத்து வந்தாள். எப்படி?

 மணமகனின் வலதுகையில் இருந்த கோலை, வீசிவிட்டு அதற்குப் பதிலாக, தான் நின்று, அவன் வலது கரத்தை தன் தோளில் வைத்துக்கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.