(Reading time: 9 - 18 minutes)

சொல்லியிருக்காங்க. இன்னிக்கி நான் ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக இருந்தாலும், அன்னிக்கு ஆரம்பத்திலே என் கைபிடிச்சு அ,ஆ....நீங்க சொல்லிக் கொடுத்ததனால்தானே இன்னிக்கி நான் இப்படி வளரமுடிந்தது. ஏன்யா இங்கேயே நிக்கிறீங்க, உள்ளே வாங்க என்னோடு! உங்களுக்கு தேவையான துணிமணி எடுத்துக்குங்க, முதலாளி! சார் தரவேண்டிய பணத்தை என் பில்லிலே சேர்த்துவிடு!" என்று கூறி வாத்தியார் முன் செல்ல ஜட்ஜ் பின்னே வந்தார்.

 கடையிலிருந்த அனைத்து வாடிக்கையாளர்களும் சிப்பந்திகளும் இதை வியப்புடன் பார்த்தனர்.

 " சுப்பு! நல்லா இருக்கியா? கூட வர்றது உன் சம்சாரமா? அம்மா! நல்லாயிருக்கீங்களா? அம்மா! இவன் ஒண்ணாங் கிளாஸ் படிக்கிறபோதே, ரொம்ப சூட்டிகையா இருப்பான்.....நான் சொல்லித் தந்தவுடனேயே கற்றுக்கொண்டு விடுவான். கற்பூர புத்தி!"

 ஜட்ஜ் தன் பங்குக்கு வாத்தியாரின் மனைவியை கும்பிட்டு, " வணக்கம்மா! நல்லாயிருக்கீங்களா?" என விசாரித்தார்.

 தொடர்ந்து, வாத்தியாரும் ஜட்ஜும் பேசியவாறே முன்செல்ல, அவர்கள் பின்னே மனைவிகள் தொடர, முதலாளி அவர்களை தன் தனியறைக்கு அழைத்துச் சென்றார்.

 அங்கே நால்வருக்கும் குளிர்பானம் வழங்கியதோடு அவர்களுக்கு தேவைப்பட்ட ஜவுளிகளையும் காட்டினார்.

 " சுப்பு! நான் வாங்கிக்கிற துணிமணிகளுக்கு நானே பணம் கொண்டு வந்திருக்கிறேன்,........."

 " நோ நோ சார்! உங்களுக்கு ஜவுளி வாங்கித்தர பாக்கியத்தை, கடவுள் எனக்கு இன்னிக்கி தந்திருக்கிறார். என் குருதட்சணை! அம்மா! நல்ல பட்டுப் புடவையாக எடுத்துக்குங்கம்மா!" என்றார்.

 வாத்தியாரையும் அவர் மனைவியையும் ஜட்ஜ், தன் காரிலேயே அவர்கள் வீட்டுக்கு அழைத்துவந்து, தானே கார் கதவை திறந்துவிட்டு வாத்தியாரும் அவர் மனைவியும் இறங்கியபிறகு விடைபெற்றுக்கொண்டார்.

 வீட்டின் உள்ளே வந்ததும், மனைவி கணவனின் காலில் விழுந்தாள். அவள் கண்களில் நீர் கோத்திருந்தது.

 " சுசீலா! திரும்பவும் நீ அவசரப்படறே! இந்த சம்பவத்தை மனசிலே ஓரத்திலே போட்டு வைச்சுக்க! அப்பப்ப, அசை போடு! இன்னும் வருங்காலத்தில் நிகழப்போவதையும் இதனோடு ஒருங்கிணைத்து முடிவிலே என்னுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். சரியா?"

 " கடையிலே கூடியிருந்த அத்தனை பேரும் வாயை பிளந்து ''ன்னு வியந்து பார்க்கும்போது, ஹைகோர்ட் ஜட்ஜ் கைகட்டி உங்களோட வந்ததை நினைச்சா, ரொம்ப ரொம்ப பெருமையா இருக்குங்க!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.