(Reading time: 9 - 18 minutes)

இருந்தால், அதற்கென்ன பொருள்? உன் பெருமையும், மகிழ்வும் உன்கையில் இல்லை, பிறர் உனக்கு போடுகிற பிச்சை ஆகிவிடும் இல்லையா? ஒருநாள் போடுகிற பிச்சையை நிரந்தரமாக போடுவார்களா என மறுபடியும் உன் மனசு உன்னை சீண்டி வேடிக்கை பார்க்கும். உண்மையா, இல்லையா?"

 சுசீலா தலை குனிந்தாள்.

 " இந்த தவறை எல்லோருமேதான் செய்கிறோம். வீடு முழுவதும் எல்லா பொருட்களும் நிறைந்திருக்கும். ஆனா, நம் மனசு இருக்கே, அது நம் முதல் எதிரி! நம்மை அழவிடுவதிலே, அதற்கு அலாதி ஆனந்தம். வீட்டில் அந்த கண நேரத்தில் இல்லாத ஒரு சின்ன துரும்பு இல்லையே என்ற உறுத்தலை தந்து நம் நிம்மதியை கெடுக்கும்.

 அதனாலே, இந்த மரியாதை, மதிப்பு, கௌரவம் இவையெல்லாம் வெறும் ஏமாற்றுச் சொற்கள்!

 உன் உள்ளம் சலனமின்றி, எப்போதும் அமைதியாக இருக்கவேண்டுமானால், முதலில் நீ உன் மனதை உன் ஆளுமைக்குள் கொண்டுவா!

 நீ சொல்கிறபடி உன் மனம் நடக்கவேண்டும். உன் பார்வை, செயல், கவனம் எப்போதும் தெளிவாக இருக்கவேண்டும்.

 உதாரணமா, இப்போது நான் பேசுவதை எத்தனையோ ஆசையுடன் நீ கேட்டுக்கொண்டிருந்தாலும், உன் மனசு வேறெதையோ சிந்திக்கத் தூண்டும்.

 'இப்படித்தான் அன்றைக்கு தொலைக்காட்சியிலே சுகிசிவமும் பேசினார்னு துவங்கி, சுகிசிவம் அன்று வேறென்ன பேசினார் என்பதையெல்லாம் கவனத்துக்கு கொண்டுவந்து உன்னை உலுக்கும்! உண்மையா இல்லையா?"

 சுசீலா பேச்சு வராமல் தலையசைத்து ஆமோதித்தாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.