(Reading time: 27 - 54 minutes)

அழுத்தத்தில்தான் அவள் ஒருவாறு சமாளித்து நின்றதே.

சொல்லப் போனால் அவன் அவளது கையைப் பிடித்திருந்ததே அவளுக்குப் பிடிக்கவில்லை. கையை  உருவிக் கொள்ள முயன்றாள்தான். ஆனால் அவன் விடவில்லை. அவள் கையை உருவிக் கொள்ள முயன்ற போது அவளை கேள்வியாக ஒரு பார்வை பார்த்தான். அத்துடன் சரி. அதன் பிறகு அவள் அந்த முயற்சியைக் கைவிட்டு நல்லபிள்ளையாக நின்றுகொண்டாள். இன்னும் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்  கொள்ளவில்லை.

அவனின் பெற்றோர் பெருமிதம் கொண்டதற்கு அதுவும் கூட ஒரு காரணம். பையன் சினிமாத்துறையில் இருக்கான். ஒரு கல்யாணம் காட்சி பண்ணிட்டு அப்புறம் அவனை அனுப்பியிருக்கலாம். இனி அவன் உங்கள் பேச்சுக் கேட்பானா? என்ன? இனி உங்கள் பையன் உங்களுக்கு இல்லை என்று பேசியவர்களை எல்லாம் வாயடைக்க வைப்பது போல அவர்கள் கைகாட்டிய பெண்ணையே மறுபேச்சு பேசாமல் மணந்திருக்கிறான் அவர்களது மகன்.

அவன் பெண்ணையே இன்று காலை திருமணம் நடைபெறும்போதுதான் பார்த்தான். அவனது பெற்றோர் மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை.

மணமகள் கயல்விழியின் பார்வை அங்கே மண்டபத்தில் வலம் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மீது பட்டுப் பட்டுத் திரும்பியது. அவள் யார்? அவளுக்கும் தன்னுடைய கணவன் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுதான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவள் தன் கணவனின் கைகளில் இருந்து  தன் கைகளை உருவிக் கொள்ள முயற்சிப்பதற்கும் அவள்தான் காரணம். அவள் சொல்லித்தான் அவன் அவள் கரத்தை ஆறுதலாகப் பற்றியிருந்தான். அதனாலேயே கணவன் தன் கரத்தைப் பற்றியிருந்தது அவளுக்குப் பிடிக்காமல் இருந்தது. அந்தப் பெண் பொம்மை போன்று அத்தனை அழகாக இருந்தாள். அவளது மாமனார் மாமியாரை அத்தை மாமா என்றுதான்  அழைத்தாள். ஆனால் அவள் நிச்சயமாக அவர்கள் உறவு இல்லை என்று கயல்விழிக்குத் தெரியும். அவளது சித்திதான் சொல்லியிருந்தாள். அவர்களும் கயல்விழியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தானே?

மண்டபத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோனோரும் அவளைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.  அவளது கணவனும், மாமனார் மாமியாரும் அவளை வினு வினு என்று அழைத்தனர். அவள் முழுப்பெயர் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.

அறிமுகப்படலம் நடைபெறும் அளவிற்கு இந்தத் திருமணத்தில் அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. திடீரென்று முடிவாகி நடந்த திருமணம்.

மணமகன் ரவிவர்மனைப் பற்றிய ஓர் சின்ன அறிமுகம்.

திரையுலகப் பிரம்மா என்று எல்லோராலும் அன்பாகப் போற்றப்படுபவன். பிரபல திரைப்பட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.