(Reading time: 27 - 54 minutes)

தயாரிச்சுக்கலாம். படம் ஓடலைன்னாலும் கவலையில்லை. என்று எளிதாகக் கூறிவிட்டனர்.

நடிப்பதற்கு அவன் மனம் இசையவில்லை. ஆனால் அவர்கள் சொன்னதில் ஒன்று அவன் மனதில் பதிந்தது. தானே படத்தை தயாரித்தால் என்ன?

முதலில் அவன் படமாக்க நினைத்த கதைக்கு பிரமாண்டமாய் எல்லாம் அவன் செலவு வைத்திருக்கவில்லை. எளிய கதை, எளிய மக்கள். கதைதான் அங்கே உயிரோட்டமாய் இருந்தது. குறைந்த செலவிலேயே படத்தை எடுத்து முடிக்கலாம்தான். தனக்கு இந்த எண்ணத்தை விதைத்தவர்களுக்கு மனதிற்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டான்.

உடனே தன் பெற்றவர்களிடம் விவரத்தைக் கூறினான்.

அவர்களும் எப்போதும் போல் அவன் விருப்பத்தை மதித்தார்கள். என்ன ஒன்று அந்தத் தொகை அவர்கள் தகுதிக்கு மீறிய தொகை. அன்றே ராகவேந்தர் ஊருக்குக் கிளம்பினார். அவர்களிடம் இருந்த நிலங்களை எல்லாம் விற்றார்.

விவரம் தெரிந்தவர்கள் எல்லாம் அவர்களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கினார்கள்.

என்னப்பா இது தேவையில்லாமல் இந்த வேலையில் இறங்கறே. நம்ம பக்கத்து ஆளுங்க யாரும் சினிமாவுல இல்லை. உம் புள்ளை ஆழந் தெரியாமல் காலை விடறான். அவனுக்கு எதுக்கு இந்த தேவை  இல்லாத வேலை? ஏதோ உங்களுக்கு கஷ்டமில்லாம கஞ்சி ஊத்திக்கிட்டிருந்தது. அதை எல்லாம் வித்து எடுத்துட்டு போய் படம் தயாரிக்கிறேன்னு போட்டால் அது கடலில் கரைச்ச பெருங்காயம் மாதிரிதான். கையில் வந்து சேராது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

அவர்கள் அவற்றை எல்லாம் தங்கள் புன்னகையால் புறந்தள்ளினார்கள். சுமித்ரா தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் விற்றார்.

அப்படியும் போதவில்லை என்றதும் கடன் வாங்கினார்கள். முகம் சுளிக்காமல் அவர்கள் பணம் புரட்டித் தந்ததைக் கண்ட ரவிவர்மன் நெகிழ்ந்து போனான். அவர்கள் சிறிது சுணக்கம் காட்டியிருந்தாலும் அவன் தன் கனவை  தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை. மகன் தனக்குள்ளேயே மருகிப் போய்விடக்கூடாது என்றுதான் அவர்கள் அவன் ஆசையை நிறைவேற்றத் துடித்தனர்.

அவனும் தன் பங்கிற்கு பணம் ஏற்பாடு செய்தான். அதன் பிறகு கதாபாத்திரங்களை தேடி வேட்டை. சரியான ஆட்கள் கிடைத்த தருணத்தில் அவன் தன் பெற்றோரின் முதல் எழுத்துக்களைக் கொண்டே "ராசு ஃப்லிம்ஸ்" என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தனது முதல் படத்தை இயக்கினான். தயாரிப்பாளர்களாக தனது பெற்றோர் பெயரையே போட்டிருந்தான்.

இறுதியில் அவன் கனவு பலித்தது. அவன் இயக்கிய அந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு எல்லாம் முன்னேற்றம்தான். அவனது திறமையைக் கண்ட முன்னணி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.