(Reading time: 27 - 54 minutes)

இயக்குநர்.

அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அவன் மீது உயிரையே வைத்திருந்தனர். மகனின் படிப்பிற்காக முன்பே பட்டணத்திற்கு வந்துவிட்டனர். அப்போதே ஊரிலிருந்தவர்கள் விதவிதமாக விமர்சனங்களை வாரி வழங்கினார்கள்தான்.

இவங்க மட்டும்தான் பிள்ளையை  அதிசயமா  படிக்க வைக்கிறாங்க. ஏன் இங்கெல்லாம் இந்த படிப்பு கிடையாதா? பட்டணத்தில்தான் படிக்க வைப்பாங்களா?

ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் பையனுக்கு சொத்து சேர்ப்பது முக்கியம் என்று  கருதவில்லை. அவன் விரும்பும் படிப்பைக் கொடுத்துவிட்டால் போதும். அவன் பிழைத்துக் கொள்வான். அவன் மகிழ்ச்சிதான் முக்கியம் என்று பேசாமல் விட்டுவிட்டனர். ஊரில் இருந்த நிலங்களை எல்லாம் குத்தகைக்குக் கொடுத்தனர். அதில்  இருந்து வருமானம் வந்து கொண்டிருந்தது. அத்துடன் ரவிவர்மனின் தந்தை ராகவேந்தர் வேலைக்குச் சென்றார். அவனது தாய் சுமித்ராவும் அவரது வருமானத்திற்குள் குடும்பம் நடத்தினார். அந்த வருமானமே போதுமானதாகயிருந்தது.

ஆடம்பரமான வாழ்க்கைக்கு எல்லாம் அவர்கள் ஆசைப்படவில்லை. அத்தியாவசியமான பொருட்களே அவர்கள் வீட்டில் இருந்தன. ரவிவர்மன் படிக்கும் போதே கதை எழுதுவது, நாடகம் போடுவது என்றிருந்தான்தான். பெற்றவர்கள் ஆசைப்படி பொறியியல் பாடத்தை தான் எடுத்திருந்தான். வளாக நேர்க்காணலில் வேலையும் கிடைத்த போது அவனது பெற்றோர் மிகவும் மகிழ்ந்தனர்.

ஆனால் அவன் சில மாதங்களிலேயே தனக்கு இதில் ஆர்வம் இல்லை. உங்களுக்காகத்தான் நான் இந்த வேலைக்குப் போனேன். என்னால் முழு மனதுடன் வேலை பார்க்க முடியவில்லை. என்னுடைய  ஆர்வம் எல்லாம் சினிமாதான் என்று வந்து நின்ற மகனை அவர்கள் கடிந்து கொள்ளவில்லை.

முகமலர்ச்சியுடனே அவனை அனுப்பி வைத்தனர். அவனும் தான் விரும்பிய படிப்பை படித்தான். படித்து முடித்த உடனே  கதையைத் தயார்  செய்து கொண்டு ஒவ்வொரு திரைப்பட நிறுவனமாக அலைந்தான்.  யாரும் அவனுடைய கதையை  படமாக்க  முன்வரவில்லை.

எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால் அதன் அருமை புரியாதல்லவா? அவன் தனது படைப்பாற்றலை மிகவும் நேசித்தான்.

அவனே கதாநாயகன் போன்று இருப்பதால் நிறைய பேர் ஏன்ப்பா வெட்டி வேலை. இதற்குப் பேசாமல் நீ கதாநாயகனாக நடிக்க முயற்சி செய்யலாம். அதன் பிறகு பணம் சம்பாதித்துவிட்டு இப்பத்தான் நிறைய பேர் செய்கிறார்களே அதுபோல் நீயே சொந்தக் கம்பெனி வச்சு படம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.