(Reading time: 27 - 54 minutes)

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்துவிட்டார். அவள் ஆசிரியைப் பயிற்சி பெற்றிருக்கிறாள்.

வினோதினி அவளிடம் நட்பாக சிரித்துப் பேசி பழகும்போது அவளால் அவளை சந்தேகப்பட முடியவில்லை. அவளது நினைப்பெல்லாம் ஏன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான்.

இப்போது கணவனிடம் தவிர அவனது சொந்தங்கள் அனைவரிடமும் அவள் நெருக்கம் காட்டி பழகி வருகிறாள். அவனிடம்தான் நெருங்க மறுக்கிறாள். இதுவரையில் அவர்களின் தனிமையில் கூட தனித்தனியாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

இந்த கொடைக்கானல் பயணமே அவளது மருத்துவ பரிசோதனைக்காகத்தானோ என்பது போல் தான் அவன் நடந்து கொண்டான்.

அன்றே அவர்கள் ஊர் திரும்பினர்.

அவளுக்கு மாமனார் மாமியாரை மிகவும் பிடித்துவிட்டது. மிகவும் பிரியமுடன் நடந்து கொண்டவர்களிடம் அவளும் அன்பைப் பொழிந்தாள்.

அன்று இரவு அவர்களின் அறைக்கு வந்த ரவிவர்மன் மனைவியிடம் பேசலாமா? உனக்குத் தூக்கம் வருகிறதா? என்று கேட்டான்.

அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக தூக்கம் வருகிறது என்றுவிட்டாள்.

அவன் ஒன்றும் பேசாமல் அறையின் விளக்கை அணைத்தவன் அவளையும் அணைத்தான். அவள் திணறிப்போனாள். அவன் வந்து இப்படி அணைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

இத்தனை நாட்கள் ஏன் ஒதுங்கிப் போனான்? இன்று ஏன் ஒதுங்கிப் போகாமல் இருந்தான்? எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. மென்மையாகத்தான் நடந்து கொண்டான். இருந்தாலும் அவள் மனதில் ஏமாற்றம் தான் நிறைந்திருந்தது. அதன் பிறகு வந்த நாட்களிலும் அவன் ஒரு கணவனாய் நடந்து கொண்டான்தான். ஆனால் அவளால் அவனோடு இசைந்து வாழ முடியவில்லை.

அவன் அவள் முகத்தில் இருந்த அந்த வடுவில் முத்தமிடும் நேரத்தில் எல்லாம் மரவட்டையாய் சுருண்டாள். அவள் தன்னிடம் வெறுத்ததே அந்த வடுதான். அதை நினைவு படுத்துவதுபோல் அவன் முத்தமிட்டபோது அவன் தன்னை மட்டப்படுத்துகிறான் என்று எண்ணினாள். ஆனாலும் அவனிடம் எதையும் மறுக்கவில்லை. ஒரு மனைவிக்கான கடமையை சரிவர செய்தாள். அவனோடு கழித்த நேரங்களை சுருக்கிக் கொண்டவள் மாமனார் மாமியாரோடு அதிகம் நேரத்தை செலவிட்டாள்.

ன்றைய தினம் படப்பிடிப்பு இடைவேளையின் போது வினோதினி ரவிவர்மனைக் காண வந்திருந்தாள்.

வந்தவள் அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

"ஏய். என்ன கல்யாணம் ஆன உடனே என்னை மறந்துட்டேல்ல." இடுப்பில் கை வைத்துக் கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.