(Reading time: 27 - 54 minutes)

"நீங்க ஏன் அவரைக் கல்யாணம் செய்துக்கலை?"

அவள் அப்படி கேட்பாள் என்று வினோதினி எதிர்பார்க்கவில்லை. அவளுக்குத் தன்னைப் பற்றித் தெரியும் என்று எண்ணியிருந்தாள்.

"நீ என்னை சந்தேகப்படறியா கயல்?"

அவள் குரலில் அதிர்ந்து போனாள் கயல்விழி. உடனே பதட்டமானாள்.

"இல்லையில்லை. அப்படியெல்லாம் இல்லை. நீங்க அழகா இருக்கீங்க? ஏற்கனவே குடும்பத்தோட பழக்கம் வேறு. நீங்க ஏன் அவரைக் கல்யாணம் செய்துக்கலை?"

"நீ அழகா இல்லையா?"

அவள் கேட்ட உடனே அவள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.

"நீங்க சும்மா சொல்றீங்கன்னு தெரியும். நான் கேட்டதற்குப் பதில் சொல்லுங்க."

"நான் அவனைக் கல்யாணம் செய்துக்கனும்னா  அவரோட சம்மதம் எனக்கு முக்கியம்."

யாரென்று குறிப்பிடாமல் அவள் அவர் என்று யாரையோ குறிப்பிட்டாள்.

"யார் உங்கப்பாவா?"

அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

"அப்புறம் யாரு மாமாவா? அவருக்கும்தான் உங்களைப் பிடிக்குமே."

அவள் இப்போதும் இல்லையென்று தலையசைத்தாள்.

"அப்புறம் யாருதான் சம்மதம் சொல்லனும்?"

"நடந்து முடிந்ததைப் பத்தி இப்ப என்ன பேச்சு?"

"இல்லை அவர் யாருன்னு எனக்கு சொல்லுங்க."

"என்னோட புருசன்."

அவள் பதிலில் திருதிருவென்று விழித்தாள் கயல்விழி.

அதைக் கண்டதும் வினோதினிக்குச் சிரிப்பு வந்தது.

"உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?"

பாவமான குரலில் கேட்டாள்.

"அதனால்தான் என்னோட புருசன்னு சொன்னேன்."

அவள் அசடு  வழிய நின்றாள்.

வினோதினி அவளை அணைத்துக் கொண்டாள்.

"கயல் நீ ரொம்ப நல்லவள். சும்மா யாரும் எதையும் சொல்றதை வச்சு மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. நீயும் குழம்பி அவனையும் திண்டாட வச்சிருக்கே நீ. அவன் என்னமாய் என்கிட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.