(Reading time: 27 - 54 minutes)

குப்பையில் போட்டுவிடு. உன் மனசுக்குள் குடைஞ்சுக்கிட்டு இருக்கிறதை தூக்கிப் போட்டுட்டு உனக்கு கிடைச்ச இந்த வாழ்க்கையை  சந்தோசமா வாழு தாயி. " என்று தழுதழுத்தவாறே சென்றுவிட்டார்.

"அம்மாடி கயல். நாங்க வினு வீட்டிற்குக் கிளம்புகிறோம். அவன் வந்ததும் நீயும் கிளம்பி வந்துவிடும்மா. அவள் இன்னிக்கு ஊருக்குக் கிளம்புகிறாள். வழியனுப்பி வைக்கனும்." என்றுவிட்டு அவளது மாமனார் மாமியார் கிளம்பிவிட்டனர்.

வினோதினி அவளிடமும் வரச்சொல்லியிருந்தாள்தான். அவள் ஊருக்குச் செல்வதற்கு ஏன் அத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? என்று  அவளுக்குப் புரியவில்லை.

இருந்தாலும் அவள் கூப்பிட்டுவிட்டாள். கணவன் வந்ததும் செல்ல வேண்டியதுதான். அவனுடன் அவள் வெளியில் கிளம்புவதேயில்லை.

வெளியில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. கணவனின் முகத்தைப் பார்க்க தயங்கி நின்றாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்த மாதிரி ரவிவர்மன் வரவில்லை.

"ஹாய் கயல்."

என்ற அழைப்புடன் அங்கே வந்த வினோதினியை அவள் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

"ஏய். என்ன அப்படிப் பார்க்கிறே?"

"இல்லை. உங்களைப் வழியனுப்பத்தான் மாமாவும், அத்தையும் அங்கே வீட்டுக்குப் போனாங்க."

"அப்ப நீ வரமாட்டியா?"

"இல்லை. அத்தை அவர் கூட வரச்சொன்னாங்க."

அவளே பேசுவதற்கு வழி கொடுக்கட்டும் என்று எதிர்பார்த்திருந்தாள் வினோதினி. அவனைப் பற்றிய பேச்சிற்காகத்தான் காத்திருந்தாள்.

"ஆமா. உன்னை எப்படி வச்சிருக்கான் ரவி?"

அவள் பதில் சொல்லாமல்  அவளையே பார்த்தவண்ணம் இருந்தாள்.

"ஏய் என்னப்பா அப்படிப் பார்க்கிறே?"

"இல்லை நீங்க அவரை எப்பவுமே இப்படித்தான் கூப்பிடுவீங்களா?"

அவள் தனக்குள் புன்னகையை மறைத்துக் கொண்டாள்.

"ஆமாம்."

அவள் சிறிது நேரம் பேசாமல் இருந்தால். அவள் தந்தை மனதிற்குள் இருப்பதை தூக்கிப் போட்டுவிடச் சொன்னார். பேசாமல் மனதிற்குள் வைத்திருப்பதை விட நேரிலேயே கேட்டுத் தெளிந்தால் என்ன?

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.