(Reading time: 10 - 19 minutes)

 அவனை கைது செய்து, காவலில் வைத்தால், அவன் வேலையும் பறிபோயிடும், நீயும் நடுத்தெருவுக்கு வந்துடுவே!

 இன்னிக்கி ஒருநாள் டயம் தரேன்! உன் புருஷனிடம் பேசி, இன்றிரவே ரெண்டுபேரும் வெளிநாடு எங்காவது ஓடிப்போய், இந்த கலகமெல்லாம் அடங்கினபிறகு திரும்பி வாங்க! உன் புருஷன் வேலைக்கும் ஆபத்து வராது!

 எங்களாலே செய்யமுடிந்த உதவி இதுதான். நாளை காலையில், நாங்க நடராசனை கைது செய்ய வரும்போது வீடு பூட்டியிருக்கணும், சரியா?"

 போலீஸ் அதிகாரி வெளியேறியதும், பிரபா தன் கணவனுக்கு போனில் தகவல் தெரிவித்து வீட்டுக்கு வரவழைத்து அவனை வெளிநாடு கிளம்ப வற்புறுத்தியபோதுதான், அவன் சீறி சினந்து பேசினான்.

 அவன் வெளிநாடு கிளம்ப மறுத்ததோடு, விடுதலை பத்திரம் கொடுப்பது வரையில் பேசியதால், பிரபா தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, அடுத்து என்ன செய்வதென யோசித்தாள்.

 அண்ணனை அணுக பயந்தாள். அவனால் ஒன்றும் செய்யமுடியாது என்பதோடு, அவனுக்கு மன உளைச்சல்தான் பெருகும்.

 சிதம்பரத்துக்கு போன் செய்து மாமனாரிடம் விஷயத்தை தெரிவித்து உடனே அவர்களை வரவழைத்தாள்.

 அவர்களும் ஓடிவந்து, மகனிடம் மடிப்பிச்சை ஏந்தினர். மகனோ, தனது லட்சியத்தில் வெறி பிடித்தவனாகப் பேசினான்.

 " இத பாருங்க! போலீஸ்காரங்களை நம்பாதீங்க! அவங்களுக்கு உண்மையிலேயே, பிரபாவின்மீது உள்ள பச்சாதாபத்தினாலே, வீடு தேடி வந்து எச்சரிக்கை பண்ணியிருக்காங்கன்னு நினைத்து ஏமாறாதீங்க!

 அவங்க திட்டம் என்னன்னா, பிரபாவின் மூலமா எனக்கு பிரஷர் கொடுத்து என்னை தலைமறைவாக ஓட வைத்தபிறகு, மாணவர்களிடம் என்னைப்பற்றி தவறான பிரசாரம் செய்து, என்னையும் அவர்களையும் பிரிப்பதே! பிறகு, இதேபோல, மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தி கலகம் உண்டாக்கி, துப்பாக்கிசூடு நடத்தி, பதினைந்து நாள் பள்ளிக்கூடம், கல்லூரிகளை மூடவைத்து, மாணவர்களை ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றி, அவங்க அவங்க ஊருக்கு விரட்டறதே அவங்க திட்டம்! என்னை நம்புங்க!

 இல்லை, போலீஸைத்தான் நம்புவோம்னு பிடிவாதம் பிடிச்சீங்கன்னா, ஒண்ணும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.