(Reading time: 10 - 19 minutes)

பிரச்னையில்லே!

 நாளை காலையிலே நான் கைதானால், நீங்க மூணுபேரும் சிதம்பரம் போயிருங்க!

 கைதாகலேன்னா, இந்த கலகமெல்லாம் அடங்குகிற வரையில், பிரபாவுக்குத் துணையா, நீங்களும் இங்கேயே இருங்க!

 ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் நான் என் கொள்கைகளை கைவிட்டு நாட்டைவிட்டு ஓடிப்போவேன்னு மனப்பால் குடிக்காதீங்க! அப்படியாவது உயிர் வாழணும்னு நினைக்கிற 'வேடிக்கை மனிதன்' இல்லை நான்! வீழவும் மாட்டேன்!"

 அன்றிரவு அந்த வீட்டில், நடராசன் நிம்மதியாக குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்க, மற்ற மூவரும் அழுதவாறே இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

 பொழுது விடிந்தது! ஒவ்வொரு வினாடியும் என்னாகுமோ, ஏதாகுமோன்னு மூவரும் அஞ்சி நடுங்கி ஒடுங்கியிருந்தபோது, கடிகாரமுள் 'டிக், டிக்'னு நகர்ந்து கொண்டிருந்தது.

 நடராசன் தனது மாமூல் வேலையை, பாரதியின் பாடல்களை உரக்கப் பாடிக்கொண்டு, பிரபாவிடமும் பெற்றோர்களிடமும் தமாஷாகப் பேசிக்கொண்டு, வழக்கம்போல் ஆபீஸ் கிளம்பிக்கொண்டிருந்தான்.

 அப்போது ஒரு மாணவன் வீட்டுக்குள் ஓடிவந்து நடராசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தான்.

 " தலைவா! வெற்றி! வெற்றி! நமது போராட்டம் வெற்றி! அரசு பணிந்துவிட்டது! நமது போராட்டமும் முடிந்துவிட்டது! தலைவா! உனக்காக, மாணவர் படையே காத்திருக்கு, காலேஜிலே! உன்னை தோளிலே தூக்கிவைத்து கூத்தாட துடிக்குது, உடனடியா வா! ஆபீஸுக்கு லீவு போடு!"

 " சரி, சரி! நீ போய், மாணவர்களிடம் நான் பத்து நிமிஷத்திலே அங்கிருப்பேன்னு சொல்லு!"

 மாணவன் நகர்ந்ததும், நடராசன் ஆபீஸுக்கு லீவு தெரிவித்துவிட்டு, பிரபாவை கட்டியணைத்து அலக்காக தூக்கிப் பிடித்து மகிழ்ச்சியுடன் பாடினான்.

'வெற்றி எட்டு திக்கும் எட்ட

கொட்டு முரசே!'

பிறகு அவளை கீழே இறக்கிவிட்டு பெற்றோரிடம்,

'அஞ்சி அஞ்சி சாவார்- இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே....' என பாடினான்.

 நடராசன் காலேஜ் போக கிளம்பியபோது, பிரபாவும் பெரியவர்களும் அவனை வழியனுப்ப, வீட்டுவாசலுக்கு வந்தனர்.

 அங்கே காத்துக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி, 'கங்கிராட்ஸ்' என நடராசனுக்கு சல்யூட் அடித்து, கை குலுக்கினார்!

 நடராசன் மூவரையும் திரும்பிப் பார்த்தான், பெருமையுடன்! மூவரும் தங்கள் கட்டைவிரலை உயர்த்திப் பிடித்துக் காட்டினர்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.