(Reading time: 24 - 47 minutes)

தலையாய கடமையாய் போனது! அவள் இதழ் நோக்கி அவன் கரம் சென்ற வேளையில் சட்டென கரத்தினை எடுத்துக் கொண்டான் அமன். சில நொடி மௌனங்கள், பாரங்களாகவே தோன்றின. இறுதியில் நிகழ்ந்தது அப்பிரிவு!

நடந்தவற்றை நினைவுக் கூர்ந்தவள் கண்களில் கண்ணீர் நிலைக்கவில்லை. இது அவன்தான் என்றால், அவன் தீட்டிய இக்காவியம் அவன் மனதினை தான் எடுத்துரைக்கிறதா? பரவசமடைந்தது அவள் மனம். அமனை காணும் போது அவள் உறைந்த நின்ற காரணம், இத்தனை ஆண்டுகள் கழித்து அவன் தரிசனம் கிட்டிய காரணமே! அதற்கு மேல் அவள் அலறியத்தற்கு வேறு காரணங்களும் இருக்கலாம், அதில் தவறில்லையே!

"நான் கிடைக்கவே மாட்டேன் என்று அவன் எப்படி முடிவுரை எழுதலாம்?" கண்களைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

அதுவும் சரிதானே! ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்று நாம் எப்படி முடிவுரை எழுதலாம்? நாம் என்ன எதிர்காலத்தை காண்கிறோமா? இல்லையே..! பின் எந்தத் தைரியத்தில் இது எனக்கானது அல்ல! என்னால் இதை செய்ய இயலாது என்கிறோம்? இதுவும் ஒரு வகையில் ஆணவம் தான்! நமக்கென ஒன்றை இறைவன் பார்த்துப் பார்த்து உருவாக்க, நாமோ அது எனக்கானதில்லை என்கிறோம்! அது இலக்காகவும் அமையலாம்! இல்லறமாகவும் அமையலாம்! அதைப் பற்றி நாம் ஏன் முடிவுரை எழுத வேண்டும்? பிரியத்துடன் இறைவன் ஒன்றினை அளிக்கும் போது இது எனதல்ல என்று நாம் மறுக்கையில், மனச்சாட்சியோடு கூறுங்கள் தாம் இறைவனாக இருந்தால் அதனை அந்நபருக்கு பரிசளிப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள்..! பின், இழந்ததற்கு அவனை குறை கூறுகிறோம்! அவனாய் பறிப்பது நிச்சயம் நமக்கானது அல்ல! அவனாய் அளிப்பதும் வேறு ஒருவருக்கானது அல்ல! சுலபமாக கூறினால், எது ஒன்று அதிகமாய் முயற்சியை கேட்கிறதோ அது நிச்சயம் நமக்கானதே! இது காதலுக்கும் பொருந்தும்! கனவுகளுக்கும் பொருந்தும்.

"மன் சார்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்மா! நான் அவருடைய பெரிய ஃபேன்!" என்றவளைப் பார்த்து சிரித்துவிட்டார் ஆயிஷா.

"நீ காரணம் சொல்லவில்லைனாலும் பேசலாம் பேட்டி! அவன் உள்ளே தான் எழுதிட்டு இருப்பான். நீ போய் பேசு! நான் மாடியில துணி எடுத்துட்டு வரேன்!" அவர் சென்றுவிட, வசதியாய் போனது என்று அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தாள் ஜானு. கதவுத் திறவும் சப்தம் கேட்டதுமே தன் புத்தகத்தினை மூடினான் அமன்.

"யாரு?அம்மா?" அவள் மௌனமாய் இருந்தாள். தன்னருகே யாரோ ஒருவர் வந்து நிற்பதனை அவனால் உணர முடிந்தது! தன் ஆசனம் துறந்து அவன் எழ, அந்த ஆசனத்தில் அமர்ந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.