(Reading time: 24 - 47 minutes)

கொண்டான் வினேஷ்.

"எனக்கு ஈவ்னிங் இருந்தா நல்லா இருக்கும். ஒரு சின்ன விஷயம், எழுத்து வடிவங்கிறதால கொஞ்சம் லேடிஸ் ஸ்டாப் இல்லைன்னா நல்லா இருக்கும்!" தனிப்பட்ட முறையில் வேண்டிக் கொண்டான் அமன்.

"பிரச்சனை இல்லை சார்! பார்த்துக்கலாம்!" மேற்கொண்டு இதர விவரங்களைப் பேசிக் கொண்டனர் இருவரும்! ஆனால், அவன் அறியவில்லை தன் வாழ்வின் திருப்புமுனை அங்குத்தான் காத்திருக்கிறது என்று!!! அவனைப் பாதுகாப்பாய் அழைத்துச் சென்றவளே பாடம் எடுக்கவும் வந்திருந்தாள். ஆரம்பத்தில் இருவருக்குமே நிலைமை தர்ம சங்கடமாய் போனது. ஆனால், நாளாக அது அமனின் மனதில் காதலாய் உருவெடுத்த விந்தையினை ஜானகி உணரவே இல்லை. ஆரம்பத்தில் இருந்த சங்கடம் நாளடைவில் அவன் மனதில் காதலாய் உருமாற, ஏனோ அவள் முதலில் காட்டிய தயக்கம் பின்னாளில் காணாமலே போனது. ஜானகிக்கு கல்வி போதிப்பது சுகமானப் பணியானது! தனது இருபது வயதில் அப்பயிலகத்தில் பகுதி நேர பணியில் சேர்ந்திருந்தவள், தன் மற்றொரு பகுதியை அங்கு தான் காணப் போகிறாள் என்பதை அவள் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. அமன் மிகவும் புத்திசாலி! இரு மாதங்களில் அவள் போதித்தவற்றை எல்லாம் மிக சரளமாக கற்றுத் தேர்ந்தான் அவன். அவனது வகுப்பானது முடிந்த அந்த இறுதிநாள் ஏற்பட்ட அப்பிரிவை அவன் மனம் சற்றும் விரும்பவில்லை. தத்தம் இருவருக்குள்ளும் தயக்கங்கள் நஞ்சாய் பரவி இருந்தன. மனமே இன்றி தான் பிரியும் வேளையில் அவளிடத்தில்,

"நீங்க எப்படி இருப்பீங்க டீச்சர்?" என்ற வினாவினை வைத்தான் அமன். அவனிடம் எப்படி விடையளிப்பது என்ற தயக்கத்தில் உழன்றவள் சற்றும் தயங்காமல் அவனது கரத்தினைப் பற்றினாள். ஆம்...! அவள் மனதிலும் காதல் துளிர்விட்டிருந்தது.எனினும் காலத்தின் கட்டாயம் இருவரையும் ஊமையாக்கவே செய்தது! அவனுக்கு அவன் குறை பெரியது, அவளுக்கோ அவள் தயக்கம் பெரியது! சிறு நாணப்புன்னகையுடன், அவன் கரங்களைத் தன் கன்னத்தில் பதித்தாள். அவள் செய்கை அவனை முற்றிலுமாக உறைய வைத்தது. அவள் எவ்வித வார்த்தையையும் உதிர்க்கவில்லை. அவள் புன்னகைப் பூத்திருக்கிறாள் என்பது அவள் கன்னத்தைத் தீண்டும் சமயம் அவனுக்குத் தெரிந்தது. தன் கரங்களால் அவள் முகத்தினை உணர்ந்து தன்னுள் வரைந்துக் கொண்டான் அமன். விரல் கொண்டு அவள் கண்களை வருடும் சமயம், இமைத்த இமைகள் அவனது உயிர்வரை ஏதோ ஒரு தடுமாற்றத்தினை ஆழமாக, மிக ஆழமாக இறக்கின. இத்தனை ஆண்டுகளில் அதுபோலான தடுமாற்றத்தினை அவன் என்றுமே உணர்ந்ததில்லை. மனம் தடம் மாறியப்போதும், தன் கண்ணியத்தினைக் காப்பதே அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.