(Reading time: 24 - 47 minutes)

சொன்னாரு!"என்றதும் சட்டென விழிகள் விரிந்தன அவளுக்கு!

" கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஒற்றை காலில் நிற்கிறானாம்!" பெருமூச்சை விடுத்தாள் பவித்ரா.

"ஏனாம்?"

"ஏதோ காதல் விஷயம் தான்! ஐந்து வருடத்துக்கு முன்னாடி நடந்ததுன்னு மட்டும் தான் தெரியும்! அதை தெரிந்து என்னப் பண்ணப் போறோம்?நீ என்ன சாப்பிட வரீயா? இல்லையா?" என்ற தமக்கையை உடனே அங்கிருந்து துரத்த முயன்றான் ஜானு.

"நா...நா...நா...ஒரு பத்து நிமிடத்துல வரேன்! நீ போ!" அவள் நடவடிக்கை யாவும் புதிராய் போனது அவளுக்கு! கேள்வியாகத் தங்கையை பார்த்தப்படி நகர்ந்தாள் அவள். தமக்கை நகர்ந்ததும் தனது கணினியின் உதவியை நாடி அந்த மின்னணு புத்தகத்தை நகலினைத் திறந்து சில அத்தியாயங்கள் கடந்தாள் ஜானகி.

"அவள் கரம் தீண்டிய நொடி முச்சங்கங்கள் கொண்டு உயர்ந்த தமிழ் உயிர்பெற்றதாய் தோன்றியது அவனுக்கு!" என்ற பத்தி அவள் சந்தேகத்தினைத் துளிர்க்க வைத்தது. பக்கங்களைப் புரட்டினாள்.

"காலம் உறையாமலே போகட்டும்! அது உறைவதால் அவளும் உறைந்துப்போனால், பின், மீண்டும் எப்போது கிட்டும் அவள் தீண்டல்!"

"இறுதி நாள் ஏற்றப்பட்ட பிரிவினில் இறுதியாக தன் இதயத்தினை அவளிடத்தில் சமர்ப்பித்துவிட்டு இறந்த தேகமாய் இல்லம் திரும்பினான் அவனும்!"

"காலம் தாழ்ந்தும் காத்துக் கொண்டிருக்கிறான். ஏற்பட்ட முதல் காதலும் மறவாமல், தன் குறை களைந்து வேறு ஒருத்தியையும் ஏற்காமல் என்றேனும் மாறும் என்ற மமதையில்!" போன்ற வாக்கியங்கள் அவளை சுக்கு நூறாய் உடைத்தன. கண்கள் கசிந்துருகி அவ்வார்த்தைகளில் தாக்கத்தினை உணரத் தொடங்கினாள் ஜானு.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு...

பல்மொழிகள் பயிற்றுவிக்கும் அப்பயிலகத்தின் முன்னிலையில் தன் கையிலிருந்த தடியை ஊற்றினான் அமன். எதிரில் இருந்த படிகள் அவனைச் சற்றே குழப்பிப் பார்த்தன. வழிகள் எங்கிருக்கிறது என்றே புலப்படவில்லை அவனுக்கு! ஆள் அரவமே இல்லாமல் இருப்பதாக ஓர் எண்ணம் அவனுக்குள். சமாளித்துக் கொண்டு ஒரு வழியாக படிகள் ஏறி முடித்தான் அவன்.

"ஏ...! அங்கே பாரு! பார்க்க எவ்வளவு ஸ்மார்டா இருக்கான். பாவம், கண் தெரியாதுப் போலிருக்கே!" பலரின் பரிதாப பார்வைக்கு தள்ளப்பட்டான் அவன்.

"சும்மா சொல்ல கூடாது, ரொம்ப அழகா இருக்கான்!" ஏனோ அவ்வார்த்தைகள் அவனுக்குத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.