(Reading time: 24 - 47 minutes)

பார்த்தாலும் ஏன் தனியா இருக்கன்னு புரியலை!" என்றவரின் கோபம் அவனுக்கு ஒன்றும் புதியதானது அல்ல!

"மா...! புது கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியலை. ஸாரி!" அவரும் இக்காரணத்தினை பலமுறைகள் கேட்டு அலுத்துப் போயிருந்தார்.

"சரி...முகம் கழுவிட்டு வந்து சாப்பிடு!" என்றவர் அவனுக்கு உணவு எடுத்துவர நகர்ந்தார். ஒரு புன்னகை ஒன்றினைப் புத்துணர்வோடு விடுத்தவன், மெல்ல தன் அறைக்குச் சென்றுக் கதவினைத் தாழிட்டான். மனம் மீண்டும் பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தது. பலவாண்டு காலமான வேதனை அவ்வளவு எளிதில் தீரும் ஒன்றா! அது தீர்ந்துப் போகும் என்ற எண்ணத்தில் முகத்தில் நீரை வாரித் தெளித்துக் கொண்டான் அமன்.

"வளை ஏன்மா திட்டிட்டு இருக்க? ஏதோ தெரியாம பண்ணிட்டா விடும்மா!" கோபத்தின் உச்சத்தில் திளைத்துக் கொண்டிருந்த மனையாளை சமாதானம் செய்ய முனைந்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

"என்னங்க நீங்க? நீங்க கொடுக்கிற செல்லம் தான் அவ அடங்க மாட்றா!மணி என்னாகுது பார்த்தீங்களா? ஒன்பது மணிக்கா ஒரு பொண்ணு வீட்டுக்கு வருவாங்க! வேலை ஐந்து மணிக்கு முடியுது! எங்கேடி போனன்னு கேட்டா, லைப்ரரிக்கு போனேன்னு சொல்றா! ஏன் நாளைக்கு, ஞாயிற்றுக்கிழமை எல்லாம் வீட்டில தானே இருப்பா அப்போ போகலாம்ல!" என்று உக்கிரமாய் பொரிந்த தமக்கையை பரிதாபமாய் பார்த்தாள் ஜானகி.

" கொஞ்சம் ரெபரன்ஸ்க்கு புக்ஸ் தேவைப்பட்டது. சீக்கிரம் வந்துவிடலாம்னு போனேன்கா! இனிமே போக மாட்டேன். மாமா சொல்லுங்களேன்!" சித்தார்த் கைக்கொடுப்பான் என்ற நம்பிக்கையில் அப்பாவியாய் அவனை நோக்கினாள் ஜானகி.

"பவி!என்னைப் பாரு! ஏன் டென்ஷன் ஆகுற! அவத்தான் இனி இப்படி நடக்காதுன்னு சொல்லிட்டா தானே! விடும்மா, ஜானு நீ உள்ளே போம்மா!" அவள் ஒரு புன்னகையோடு ஓரடி எடுத்து வைக்க, மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது பவித்ராவின் குரல்!

"என்னங்க நீங்க? காலம் எப்படி கெட்டுப் போயிருக்கு! நான் அவளை எப்படி கரை சேர்க்கிறதுன்னு பார்த்துட்டு இருக்கேன். நீங்க என்னன்னா..."ஆரம்பித்துவிட்டாளா என்பதாய் மீண்டும் சித்தார்த்தை அவள் நோக்க, அவன் அவளுடன் உரையாடியப்படி அவள் அறியாவண்ணம் ஜானகியை உள்ளே சென்றுவிட சைகை செய்ய, ஒரு புன்னகையோடு ஓடி மறைந்தாள் ஜானகி. அவள் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தியவன், தன் மனையாளை சட்டென பிடித்து இழுக்க, அவள் மொழிகள் யாவும் தடைப்பட்டு நின்றன.

"எதுக்காகடி இப்படி கோபப்படுற? பாரு..! மூக்கெல்லாம் சிவந்துடுச்சு!" அவள் நாசியோடு தன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.