(Reading time: 24 - 47 minutes)

ஏதும் அளிக்காமல் மீண்டும் அவன் முகத்துடன் தன் முகத்தினை உரசினான் அவன். நேரம் காலம் எல்லாம் அவன் அறிய மாட்டான். அவன் விரும்பினாலும் அறிய இயலாது. காரணம், நம்மால் காணக் கூடிய புறப்பார்வை அற்றவன் அமன். அவன் உலகம் அழகானது, அவன் மேனி அழகிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. யாரையும் தீய அல்லது தவறான கண்ணோட்டதும் காண்பதில்லை. அவனால் எவ்வித தவறையும் காண இயலாது, அவன் உலகினில் காருண்யம் அதிகம்! அதில் நாம்படும் அல்லல்கள் இருந்ததில்லை.

"வா கிளம்பலாம்!" என்றவன் அருகிலிருந்த தனது தடியை எடுத்தான். தேஜாவின் கழுத்திலிருந்த கயிற்றைப் பற்றிக்கொண்டான். அவர்களிடை எஜமானன், சேவகன் என்ற பந்தமில்லை. ஒரு தந்தைக்கு மகனாய் தான் செய்யும் பணியாக ஏற்று இருளில் அவனுக்கு வழி ஏற்படுத்தினான் தேஜா. தேஜாவும், அந்தத் தடியுமே அவன் உற்ற தோழர்கள்! அமன் தனக்கென எந்த ஒரு நண்பர்கள் பட்டாளத்தையும் வகுத்துக் கொள்ளவில்லை. தனக்கென எந்த உறவையும் அவன் தக்க வைத்துக் கொள்ள நினைத்ததில்லை. அவனுக்கானத் துணை அவனது தாய் மட்டுமே! பிறப்பிலே பார்வையும், அதன்பின் போதைக்கு அடிமையான தந்தையை தனது மூன்று வயதில் இழந்த அவனை அவன் தாயார் ஆயிஷாவே போராடி வளர்த்தார் இருபத்தெட்டு ஆண்டுகளாய்! ஆரம்பம் முதலே தன் வாழ்வினை ஒரு துர்பாக்கியமாக கருதி வாழ்ந்தவனுக்கு அவன் தாயார் தவிர அனைத்தும் துன்பத்தையே வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அவன் பல வெற்றிகளைக் குவித்தவன், எனினும்,தாயார் இல்லையெனில் தன் வாழ்வும் தனித்துவிடப்படும் என்ற அச்சமே அவன் துன்பத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.

இல்லத்தில் தேஜாவின் ஒலிக்கேட்டதும், பெருமூச்சினை விடுத்து எழுந்தார் ஆயிஷாம்மா. தன் புதல்வன் முன்னிலையில் கடந்துக் கொண்டிருக்கும் காலத்தால் ஏற்படும் தன் உடல்நல தேய்மானத்தினை என்றுமே காட்ட அவர் விழைந்ததே இல்லை. கூடுமான வரையில் அவன் முன் புத்துணர்வோடு இருக்கவே முயன்றுக் கொண்டிருந்தார். தான் உயிருடன் இருக்கும் வரையில் அவன் மனம் கவலையில் தனக்கு யாருமில்லை என்ற வேதனையில் வாட கூடாது என்பது அவர் எண்ணமாக இருந்தது. இருபத்தெட்டு ஆண்டுகளாகியும் இன்னும் திருமணம் குறித்த எவ்வித பேச்சினையும் எடுக்கவில்லை. தன்னிடம் இருக்கும் குறை அவனுக்கு பெரிதாய் போனது!

"மா! ஸாரி ஸாரி! வேணும்னே லேட் பண்ணலை!" என்றப்படி தன் செவிகளைப் பிடித்து மன்னிப்புக் கேட்டான் அமன்.

"நீ போய் இரண்டு மணிநேரம் ஆச்சு அமன்! இதோ வந்துடுறேன்னு போன! எப்போ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.