(Reading time: 24 - 47 minutes)

மாதிரியே தெரியாது! ரொம்ப வருடமா பழகினா மாதிரி பேசுவா!" அவன் அவர் மொழிகளை கவனிப்பதாய் தோன்றவில்லை. சாப்பாட்டிலே கவனம் பதித்திருந்தான்.

"மா! காரம் கொஞ்சம் அதிகமா போட்டுட்டிங்கம்மா!" என்ற மகனின் தட்டில் இருந்த சப்பாத்தியை பிய்த்து சாப்பிட்டு பார்த்தார் அவர்.

"ஆமாடா! கவனிக்கவே இல்லை. இதுக்குத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, மருமகள் வந்து செய்வா, எனக்கும் வயசாகிடுச்சு" என்றதும் வாயே திறவவில்லை அவன். உணவினை உண்டுவிட்டு எழுந்து தன் அறைக்குள் நுழைந்தான் அமன். மெல்ல மேசையினை தன் தடியின் உதவியுடன் தேடியவன், அதனைக் கண்டறிந்தவன் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான். டிராவினைத் திறந்து தனது நாட்குறிப்பினை எடுத்தவன், எழுதுகோலின் உதவியோடு கிறுக்கலானான். பிராய்லி முறை மட்டுமே பயின்று வளர்ந்தவனுக்கு, எழுத்து வடிவம் பயிற்றுவித்தவளின் குரல் அவன் புத்தியுள் நிழலாடியது. இன்று அவனது எழுத்துக்கள் உலகம் எங்கிலும் மதிக்கப்படுகின்றன. காரணம், அவன் மனதிலிருந்த அவநம்பிக்கையை உடைத்தெறிந்தவளின் போதனைகள்!

"உங்க உலகம் அழகானது மிஸ்டர். இம்ரான்! அது கிடைத்ததற்கு நீங்க சந்தோஷப்படணும்!" அவள் குரல் மனதில் நின்றுப்போன ஒன்று! வாழ்வில் என்றாவது ஓர்நாள் அவள் குரல் மீண்டும் கேட்கும் பாக்கியம் கிடைத்தால்...என்ற எண்ணமே அவனது நாடி நரம்புகளில் பரவசத்தினை ஊற்றெடுக்க செய்தது.

றுநாள் காலை...

"ச்சீ...ச்சீ...ச்சீ...! இந்த அக்கா எப்போ பார்த்தாலும் கல்யாணத்தைப் பற்றியே ஜாடையா பேசுறா! எப்போ பார்த்தாலும் மாமியார் வீட்டுக்குப் போனா தான் தெரியும்னு சொல்றா! பேசாம நான் சாமியாரா தான் போகப் போறேன்!" புலம்பியப்படி வந்து அமர்ந்தவளை நோக்கிப் புன்னகைத்தான் சித்தார்த்.

"என்னம்மா? உங்க அக்காக்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்தியா?" என்று எள்ளி நகையாடினான் அவன்.

"உங்களுக்கு பழகிடுச்சு! வர வர அக்கா அம்மா மாதிரி பண்ணிட்டு இருக்கா மாமா! அவக்கிட்ட இருந்து தப்பிக்கயாச்சு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு ஓடிவிடுறேன்!" அவளும் பாவம் தானே! எவ்வளவுத் தான் திட்டு வாங்குவாள்?

"அடியே அதிகபிரசங்கி! என்னைப் பற்றி குறை சொல்லிட்டு இருக்காமல் இதைக் கொண்டுப் போய் பக்கத்து வீட்டில் கொடுத்துட்டு வா!" என்று ஒரு தட்டு நிறைய மைசூர் பாகினை தந்தாள் பவித்ரா.தமக்கையை முறைத்தப்படி அதனை வாங்கியவள், அதனை எடுத்துக்கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.