(Reading time: 24 - 47 minutes)

"நீ...நீங்க? யாரு?" இம்முறை மிக சாந்தமாக ஒலித்தது அவன் குரல்! அங்கு ஓரிரு நிமிடங்களுக்கு மௌனமே சாதகமாய் இருந்தது.

மெல்ல அவனை நெருங்கியவள்,அவனது கரத்தினைப் பற்றி அதனுள் தன் கரத்தினை சேர்த்தாள். அதே தீண்டல்! பல காலங்களாய் அவன் தேடிய அதே ஸ்பரிசம் அது! அவன் கரங்களை எடுத்து தனது கன்னத்தில் பதித்தாள் அவள். இப்போது அவனிடம் எவ்வித சந்தேகமும் இல்லை. அனைத்தையும் அவள் தீர்த்துவிட்டாள். அன்று எவ்வித உணர்வுமின்றி உருவான பந்தம் இன்று உருவெடுத்து அவன் முன்னிலையில் நின்றுக் கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் பனிக்க அவள் முகத்தினை தன் ஆசைத்தீர தீண்டினான் அமன். அன்று அவன் ஸ்பரிசத்தில் உணர்ந்த அந்த உரிமையினை பெயரினை தெரிந்துக் கொண்டாள் ஜானகி. 'காதல்' ஆம்..! அதன் பெயர் காதல்! அவள் கண்கள் கண்ணீரை சேகரித்துக் கொண்டன. இப்பந்தம் கரம் சேரும் என இருவருமே நம்பிக்கைக் கொள்ளவில்லை. ஆனால், இறைவன் தத்தம் இருவரு சேர்ந்தாக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதனை மாற்றும் அதிகாரம் இங்கு எவருக்குத் தான் உள்ளது? அவன் கரம் அவள் கன்னத்தினைத் தாங்கியப்படி நிலைத்து நின்றது.

"டீச்சர்?" அமனின் மொழிகள் நிறைந்திருந்தது எல்லாம் பரவசம் மட்டுமே! பல காலத்திற்கு முன்னால் விட்டுவந்தப் புதையல், இன்று அவனைத் தேடி அவன் ஒருவனுக்காக முன் நின்றுக் கொண்டிருந்தாள்.

"இன்னும் சந்தேகமா?" என்றவள், சற்று எக்கி அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்த அந்நிகழ்வு அவள் காதலினை, அவள் காத்திருப்பை, அவள் மனதினை, அவளை முழுதுமாக அவனிடத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னால்,அங்கு நடந்த மௌன சம்பாஷணைகள் மொழிகளின் அறிவிற்கு எட்டாமல் உயர்ந்து நின்றன. கடந்தக்கால காயங்களை மறந்துவிடு, இனி உன் வாழ்க்கைக்கு நான் பாதையாகவும், உன் விழிகளுக்கு நான் ஔியாகவும் இருப்பேன் என்ற வாக்கினை அவன் மார்பில் சாய்ந்து அதிகாரப்பூர்வமாய் அளித்தாள் ஜானகி. உற்றவரின் மனம் சேர்ந்தப்பின்னர், இனி மற்றவர் அளித்த வேதனைத்தான் நிலைத்து நிற்குமா உயிரினில்! அங்கு இணைந்த ஒப்பற்ற பந்தமானது அவர்கள் காதலை மட்டுமல்ல, அகிலத்தில் காதல் அனைத்திற்கு அழகிய உவமையாய் உயர்ந்து நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.