(Reading time: 24 - 47 minutes)

தாளாமல் நின்னிருந்தவள், 'ஆ..' என அலறவிட்டாள். பரிச்சயமில்லாத பெண்ணின் குரல் கேட்க, சட்டென பதற்றமானவன், சட்டென திரும்பிக் கொண்டான்.

"யாரு...?" என்று அவன் விடுத்த வினாவிற்கு விடையளிக்காமல் ஓடும் சப்தம் மிக துல்லியமாகவே அவன் செவிகளில் எட்டியது. என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பி அவன் தவித்துக் கொண்டிருக்க, மாபெரும் அதிர்ச்சிக்கு உட்பட்டவளாய் ஓடிவந்தவளை புரியாமல் நோக்கினான் சித்தார்த்.

"ஜானு?" அவன் பேச்சினை மதியாதவளாய் தன்னறைக்குச் சென்று கதவினைத் தாழிட்டுக் கொண்டாள் ஜானகி. மூச்சிரைத்து, வியர்த்துத் தள்ளியது அவளுக்கு! காலம் ஏன் அவனை அப்படி ஒரு கோலத்தில் சந்திக்க வைக்க வேண்டும்? என்ற வினா மட்டும் அவளுக்கானதாய்!

காலையில் சென்று கதவை மூடிக்கொண்டாள்.வெகு நேரமாகியும் கதவைத் திறவாததால் சந்தேகித்து சென்று கதவினைத் தட்டினாள் பவித்ரா.

"ஜானு...?என்னடி பண்ணிட்டு இருக்க?" பொறுமையிழந்துப் போய் பவித்ரா கதவினைத் திறவ போர்வையை போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜானு.

"என்னடி? என்னாச்சு?" பதறியப்படி தங்கையின் நெற்றியில் கரம் பதித்தவள் அதிர்ந்துப் போனாள்.

"இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த? இப்போ என்னடி உடம்பு இப்படி கொதிக்குது?" என்னவென்று விடையளிப்பது என்பதே புரியாமல் விழித்தாள் ஜானகி.

"அக்கா! நான் ஒண்ணு கேட்கட்டா?"அப்பாவியாய் அவள் கேட்ட விதம் இவள் தன் தங்கைத்தானா என்ற சந்தேகத்தை தோற்றுவிட்டது பவித்ராவிற்குள்! அனுமதியளித்தவளாய் தலையசைத்தாள் அவள்.

"ப...பக்கத்து...வீட்டில அந்த அம்மா மட்டும் தானே இருக்காங்க?" சம்பந்தமே இல்லாமல் அவள் விடுத்த வினா அவளைத் திடுக்கிட வைத்தது.

"அவங்க பையனும் இருக்காங்க! பாவம்...அவருக்குப் பிறவியில இருந்தே பார்வை கிடையாதாம்! அவங்க ரொம்ப நல்லவங்க தெரியுமா? மாமியார், நாத்தனார் கொடுமை அதிகமாம்! இவங்க கர்பமாக இருக்கும் போது கருவைக் கலைக்க ஒரு மருந்தைக் கொடுத்து, தெய்வாதினமாக பையன் பிழைத்துட்டான். ஆனா, அவன் பார்வை போயிடுச்சு!" அவள் எவ்வித விடையையும் நல்கவில்லை.

"என்கிட்ட கூட எப்போதாவது பேசுவான். ரொம்ப தன்னடக்கமான பையன்! உங்க மாமா அவனைப் பற்றி சொல்லிருக்காரு! பெரிய எழுத்தாளனாம்! நீ கூட படிப்பியே, இந்த ஏதோ ஒரு புக் பற்றி அடிக்கடி பேசுவியே...ஆ...! விழியான ஔி நீ! அதை எழுதினது அவன் தான்னு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.