(Reading time: 24 - 47 minutes)

நாசியினை உரசினான் சித்தார்த். அவளது கோபம் எல்லாம் களையப்பட்டு உறைந்துப்போய் நின்றாள் பவித்ரா.

"இது அவ வாழ்க்கைம்மா! அவளை சுதந்திரமா வாழவிடு! அவளுக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு! கல்யாணத்துக்கு அப்பறம் அவ சுதந்திரமா இருக்க முடியுமோ, முடியாதோ! பிறந்த வீட்டில் தானே அவ சந்தோஷமா இருக்க முடியும்?" என்னவென்று பதில் உரைப்பாள் அவள்..? ஐந்தாண்டுகளுக்கு முன் பவித்ராவின் மணம் முடிந்த சில தினங்களில் அவர்கள் ஒற்றை உறவான தந்தையும் இறந்துப்போக, நிர்கதியாய் நின்ற தங்கையை தன் மகளாய் பாவித்து அவன் பேணிக் காத்துக் கொண்டிருக்கிறான். சித்தார்த்தின் பார்வையில் ஜானகி வெறும் மனைவியின் தங்கை மட்டுமல்ல! அவள் அவளது முதல் குழந்தை! தாயின் கண்டிப்பை தமக்கை பெற்றுவிட, தந்தையின் அன்பினை அவன் ஏற்றுக்கொண்டான்.

"போ! அவ பசியோட வந்திருப்பா! சாப்பாடு எடுத்து வை, நீயும் சாப்பிடு! நான் கொஞ்சம் வெளியே வாக்கிங் போயிட்டு வரேன்!" என்று அவள் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான் சித்தார்த். அவள் கோபங்கள் யாவும் கரைந்துப்போயிருந்தன. மனையாளை சமாதானம் செய்த வெற்றியோடு வெளியே வந்தவன், அருகே தேஜாவுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்த ஆயிஷாம்மாவை பார்த்துப் புன்னகைப் பூத்தான்.

"என்ன பேட்டா ஒரே சத்தமா இருக்கு?" என்றார் அவர் புன்னகையுடன்!

"ஜானு கொஞ்சம் லேட்டா வந்துட்டாம்மா! பவி உடனே டென்ஷனாகிட்டா! சமாளிக்க முடியலைம்மா!"பெருமூச்சினை விடுத்தான் அவன்.

"நல்லது தானே பேட்டா! காலம் அப்படி இருக்கு என்னப் பண்றது! சரிப்பா நீ போ!" என்று முகமலர்வோடு வழியனுப்பி வைத்தார் அவர். ஒரு புன்னகையை பரிசளித்துவிட்டு வெளியேறினான் சித்தார்த். தேஜாவிற்கு உணவு பரிமாறிவிட்டு உள்ளே அவர் நுழைய தலை துவட்டியப்படி வந்தான் அமன்.

"மா! என்னப் பக்கத்து வீட்டில் ஒரே சப்தம்?" என்றப்படி நாற்காலியை கண்டறிந்து அமர்ந்தான் அவன்.

"போன வாரம் குடி வந்தாங்கல்ல! அவங்க வீட்டுப் பொண்ணு கொஞ்சம் தாமதமாக வந்துட்டா! பெரியவள் சண்டைப் போட ஆரம்பித்துட்டாளாம்!" என்றப்படி அவனுக்கு உணவினைப் பரிமாறினார் அவர்.

"அவங்க வீட்டில் அக்கா, மாமா, அவங்க தங்கச்சியா?"என்றவனுக்கு 'ம்' என்று பதிலளித்தார் ஆயிஷா.

"அந்தப் பொண்ணு சரியான குறும்புக்கார பொண்ணுடா! பேச ஆரம்பித்துட்டா, புதுசா பழகுற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.