(Reading time: 24 - 47 minutes)

அமனின் இல்லம் நோக்கிச் சென்றாள்.

"எல்லா வேலையும் என்னையே தான் வாங்கணுமா? வீட்டில் இருந்துவிட கூடாதே! இங்கே போ, அங்கே போ இதை செய் அதை செய்னு உயிரை வாங்க வேண்டியது!" புலம்பிக்கொண்டே பக்கத்து வீட்டை அவள் அடையவும், வெளியே அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தார் ஆயிஷா.

"என்ன பேட்டி?" என்ற குரலில் சட்டென முகம் மலர்ந்தாள் ஜானகி.

"இந்தாங்கம்மா! அக்கா கொடுத்துட்டு வர சொன்னா!" என்று புன்னகையுடன் பலகாரத்தினை நீட்டினாள் ஜானகி.

"என்னம்மா விசேஷம் இன்னிக்கு?" என்றவரின் செவிக்கருகே சென்று,

"இன்னிக்கு ஸ்ரீராமநவமி! அக்கா விரதம் இருந்துப் பண்ணா! இந்தாங்க!" என்றவளைக் கண்டு புன்னகைத்தார் ஷபானா.

"நான் கொஞ்சம் அவசரமா வெளியே போயிட்டு இருக்கேன். கொஞ்சம் உள்ளே வைத்துவிடு கண்ணா!" என்றவர் அவசர அவசரமாக காரில் ஏற கார் புறப்பட்டது.

"ம்..?வீட்டைப் பூட்டவே இல்லை?" தன் இதழ்களை சுழித்துக்கொண்டு உள்ளே அவள் செல்ல தலை நிமிர்த்திப் பார்த்தான் தேஜா.

"ஹாய்! ஸ்வீட் சாப்பிடுறீயா?" என்றவள் அவனிடம் ஒரு மைசூர் பாகினை நீட்ட, அவன் விருப்பத்துடன் அதனை சுவைத்தான். தேஜாவின் சிரத்தினை சில நிமிடங்கள் தடவிக்கொடுத்து உள்ளே சென்றாள் அவள்.

"வீடே அமைதியா இருக்கு? எந்தத் தைரியத்துல வீட்டைப் பூட்டாமல் போனாங்க? தேஜா இருக்கான்னு போயிட்டாங்களா?" என்று சிந்தித்தவண்ணம் உணவு மேசை மீது பலகாரத்தை வைத்தாள் அவள். மேசை மேல் சூடாக உணவுகள் காத்திருந்தன!

"யாருக்காக இதெல்லாம்?" என்று புருவம் சுருங்க சிந்தித்தவளை கலைத்தது அக்குரல்!

"மா! என் டிரஸ் ஏன் எடுத்து வைக்கலை?" என்றவன் நின்றக் கோலம் அவளை உறைய வைத்தது. அப்போது தான் குளித்து முடித்து ஒரு பெரிய டவலை மட்டும் இடையில் சுற்றிக்கொண்டு வந்து நின்றவனைக் கண்ட மாத்திரமே அவள் சப்த நாடிகளும் உறைந்துப் போய், விழிகள் விரிந்துக் கொண்டன. கத்தவும் நா எழாமல், அங்கிருந்து ஓடவும் முடியாமல் உறைந்திருந்தாள் அவள்.

"பௌவ்...பௌவ்..!" என்று வேகமாக கத்தியப்படி ஓடி வந்த தேஜா, அவன் அருகே வந்து உள்ளூர தள்ளினான்.

"டேய் அம்மா எங்கேடா?" அமனோ விவரம் புரியாமல் நிற்க, ஒரு கட்டத்தில் அதிர்ச்சித்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.