(Reading time: 24 - 47 minutes)

தர்ம சங்கடமாய் போயின. அவர்களின் பரிதாபப் பார்வையும் கேலிப்பேச்சும் அவனை நிலைக்கொள்ளாமல் தவிக்க வைத்தன. வழியறியாமல் தவித்தவனுக்கு அவர்களிடம் வழிக் கேட்க ஏனோ மனம் விழையவில்லை. அக்கேலிப் பேச்சிலிருந்துத் தப்பித்தால் போதும் என்று எண்ணியவனின் எண்ணத்தை ஈடேற்ற ஒலித்தது, 'ஏ...!' என்ற குரல்!அவனது இடப்புறமிருந்து ஒலித்தது அக்குரல்.

"கிளாஸூக்குப் போகாம என்னப் பண்றீங்க? போங்க..!" அவள் மிரட்டியத் தொனியிலே தெரிந்தது அவள் அங்கு கற்பிக்கும் பதவியில் இருப்பவள் என்று! சரசரவென சிலர் விரையும் சப்தமும் தெளிவாக கேட்டது அவனுக்கு!

"ஸாரி சார்! கிளாஸ் விசாரிக்க வந்தீங்களா?" இதுநாள் வரையில் அவ்வளவு மென்மையான குரலை அவன் கேட்டதில்லை. அதிகாரத் தொனியில் உரத்தும், கருணையில் அகமகிழ்ந்தும் ஒலித்தது அக்குரல்.

"உங்க மேனேஜரை பார்க்கணும்!" பதிலுரைத்தான் அவன். வேறு எவ்விதப் பதிலும் கூறவில்லை அவன்.

"வாங்க கூட்டிட்டுப் போறேன்." தன் குரலால் வழிக்காட்டினாள் அவள்.ஏனோ அக்குரல் அவனுக்கு மிகச்சிறந்த வழிக்காட்டியாக அமைந்தது.

"வினேஷ் அண்ணா! உங்களைப் பார்க்க வந்திருக்காங்க!" என்று அவள் கூறுவதும் செவிகளில் விழுந்தது.

"சரிம்மா  நீ போ! கிளாஸ் பாரு!" என்றப் பதிலும் செவிகளில் விழுந்தது. சில நொடி மௌனத்தின் பின், அமனை வரவேற்று அமர வைத்தார்.

"சொல்லுங்க சார்!" மரியாதையோடு வழிநடத்தினார் அவர்.

"என் பெயர் அமன்!எனக்கு பார்வை கிடையாது! எனக்கு என்னன்னா, தமிழ், இங்கிலிஷ் இரண்டு மொழியையும் எழுத தெரியணும் அவ்வளவுத்தான்!" தன் விருப்பத்தினை கூறினான் அவன்.

"எழுத்து வடிவமா? அதற்கு என்ன அவசியம் இருக்கு சார்?" புரியாமல் கேட்டார் அவர்.

"தனிப்பட்ட விருப்பம் தான்! வேற ஒன்றுமில்லை. ஆரம்பத்திலே பார்வை போனதால எழுவதில் நிறைய சிரமம் இருக்கு. பிராய்லி மொழிக்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அதான். பேசுறது பிரச்சனை இல்லை, ஒரு எட்டு மொழிக்கிட்ட கற்று வைத்திருக்கேன். எழுதுறதுக்கு மட்டும் போதும்! என்ன செலவானாலும் பிரச்சனையில்லை." அழுத்தம் திருத்தமாக கூறினான் அவன். சில நொடிகள் மௌனத்திற்குப் பின், விடை கிட்டியது,

"பிரச்சனை இல்லை சார்!உங்களுக்கு எந்த டைம் வரமுடியும்?" குறிப்புகளைச் சேகரித்துக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.