(Reading time: 9 - 18 minutes)

 அவன் ரொம்ப கெட்டிக்காரன், 'அமுக்கு', வாயை தொறந்து பேசமாட்டான், எல்லாம் அவங்க அப்பா-அம்மா மூலம் தான்!

 அவங்க சொல்லுக்கு அடங்கி நடக்கிற பிள்ளையா நடிப்பு! சும்மாவா? எத்தனை கோடி ரூவா சொத்து கைக்கு வரப்போவுது!

 பொழச்சிப்பான்! என்னைப்போல, ஓட்டைவாயில்லே அவன்!

 யாரைக் கேட்டாலும், 'அவனா? அவனைப்போல, ஒரு நல்ல புள்ள உலகத்திலேயே கிடையாது' என்று சொல்ல வைச்சுட்டானே!

 என்னமா நடிப்பான், தெரியுமா?

 அவன் நினைக்கிறதை சொல்றபோதுகூட, யார் பக்கத்திலே இருக்காங்களே, அவங்களைப் பார்த்து, 'நீங்க சொன்னதுபோல'ன்னு ரீல் விடுவான்.

 இப்படித்தான், 'லிவ் இன் தி பிரசண்ட்', நிகழ்காலத்திலே வாழணும்னு அவன் தனக்கு சாதகமா சொல்லிட்டு, அட்வகேட் ப்ரீத்தியைப் பார்த்து, 'நீங்க சொல்லிக் கொடுத்தமாதிரி'ன்னு சேர்த்துப்பான்!

 என் விஷயமா பேசறப்பகூட, ஒரு வருஷம் கழித்து நடக்கப்போறதுக்கு, இப்பவே எப்படி சம்மதம் சொல்றதுங்கறான்!

 அவன் சாமர்த்தியத்தைப் பாருங்க, அவன் சொல்றான், ' இப்ப நான் உடம்பிலே குறையில்லாம இருக்குறாப்பலே, ஒரு வருஷம் கழித்து இருப்பேன்னு இப்பவே உறுதியா சொல்ல முடியுமா?

 உதாரணமா, மகாவுக்கு, ரெண்டு கிட்னியும் பழுதாயிடுத்துன்னு, திடீர்னு ஒருநாள் டாக்டர் டெஸ்ட் பண்ணி சொன்னதுக்கப்புறம்தான் அவளுக்கே தெரியும். உண்மையா இல்லையா?'ங்கறான்!

 எனக்கு எப்படி ஐஸ் வைக்கறான் பாருங்க!

 " மகாவின் அழகுக்கும், படிப்புக்கும், பாட்டுக்கும், ஈடானவனா பொருத்தம் பார்க்கணும். அவ நன்னா படிக்கிறா, மேல படிக்கவைங்க!  அவங்கம்மாவைப் போல, அவளும் முகவராகணும், பேராசிரியர் ஆகணும், அவளுக்குப் பொருத்தமா, ஒரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஒரு அட்வகேட், ஒரு ஆர்கிடெக்ட், ஒரு டாக்டர், இப்படி வரணும்....  கல்யாணம் என்பது 'ஆயிரங் காலத்துப் பயிர்'னு பெரியவங்க சொல்வாங்க!  அவசரப்பட்டு, அள்ளித் தெளிக்கிற கோலமல்ல, வாழ்க்கை!'

 கடைசியா போட்டான் பாருங்க, ஒரு அதிர்வெடி! யாருமே கனவிலேகூட நெனச்சிப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.