(Reading time: 9 - 18 minutes)

 இதை உறுதியா நம்பி, ஒரு வேலை செய்!

 உன் மனசை, அதன் விளையாட்டை, அதன் விஷமத்தை, நீ தனித்து நின்னு வேடிக்கை பார்!

 புரியலையா? ராத்திரி தூங்கறபோது, கனவு காண்கிறே இல்லே, அது நீ தூக்கத்திலிருந்து வெளிவந்தபிறகும் ஞாபகம் வருது, இல்லையா? அதற்கென்ன அர்த்தம்? நீ வேற, உன் கனவு வேற! அந்தக் கனவை நீ வேடிக்கை பார்க்கிறே, சரியா?

 அதேபோல, பகலிலேயும், அதாவது விழித்திருக்கும்போதும், உன் மனசை தள்ளி நிறுத்திவைத்து, அதை நீ வேடிக்கை பார்!

 நாம வேற ஒருத்தரை, வேடிக்கை பார்த்தா, அவங்களுக்கு வெட்கம் வரும், அவங்களால சுதந்திரமா செயல்பட முடியாது!

 அதேபோல, கொஞ்சம் கொஞ்சமா, மனசு அதன் விளையாட்டை மறந்துடும்!

நல்லபிள்ளையா நீ சொல்றதை கேட்கும்!

 இந்தப் பயிற்சிதான், தியானம்! மெடிடேஷன்!

 ஒரு உண்மையை ஞாபகத்திலே வைச்சுக்க! மனசின் சுபாவமே, மாறுவதுதான்! மனசின் மறுபெயர், மாற்றம்னு கூட சொல்லலாம்!

 உலகத்திலே, மாறாத ஒன்று இந்த 'மாற்றம்' தான்!

 இதை மறக்காதே!

இந்தப் பயிற்சிக்குப் பிறகு, என் ஞாபகமே உனக்கு வராது! ஜாலியா, நித்யாவோட அரட்டை அடிச்சிக்கிட்டு சந்தோஷமா இரு!"

 எனக்கு கீதோபதேசம் செய்த சீமானை கட்டியணைத்து முத்தமிட, கரங்களை நீட்டினேன், சிக்கியது சீமான் அல்ல, அம்மா!

 " என்ன பகல் கனவா? எழுந்திரு! காலேஜுக்கு கிளம்பணும், இன்று காலேஜ் திறக்குது!.........."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.