(Reading time: 10 - 20 minutes)

" அப்படின்னா?"

" வெளியில் நடமாட, காவல்துறையின் அனுமதிச் சீட்டு!"

" இல்லையே!"

" வீட்டுக்குப்போய், ஆதார் கார்டு எடுத்துவா!"

" ஆதார் கார்டு முதலாளி வாங்கிக்கிட்டாரு, வேலைக்கு அமர்த்தியபோது!"

" அதை வாங்கிவா!"

" தொழிற்சாலையை மூடி கேட்டை பூட்டிட்டாங்க!"

" ஆதார் இருந்தால்தான், பாஸ் தரமுடியும்...."

" இல்லையே...."

" எந்த ஊரு?"

" செகந்திராபாத்!"

" ஊருக்கு போயிடு!"

" கையிலே காசில்லை."

" நடந்துபோ!" வேன் போய்விட்டது!

குமார், வீடு திரும்பினான். ரித்திகா பசியில் வாடிவதங்கி இருந்தாள்!

நடந்ததை, அவளிடம் கூறினான், குமார்!

" அடப் பாவிங்களா! உயிர் காக்க, ஊரடங்கு சட்டம்னு பேசறாங்க, இங்கே உயிர்கள் பசியில் துடிக்கின்றன, இப்படி துடித்தே சாகவேண்டியது, தானா?"

" யாரை கேட்பது? ரித்திகா! தெரிந்தவங்க வீடு தேடியும் போகமுடியாது, ஏன்னா, வெளியாட்களை உள்ளே விடமாட்டாங்க, வேற வழியே இல்லே, நடந்து ஊருக்கு திரும்பிடலாமா?"

" எத்தனை கிலோமீட்டர் தூரம்?"

" 590 கிலோமீட்டர்!"

" பஸ், கார், எதுவும் கிடைக்காதா? ஊருக்குப் போனதும், பணத்தை கொடுத்துடலாம்......."

" பஸ், ரயில், விமானம், கார், டாக்சி, எதுவும் ஓடலியே........."

" வயத்திலே ஒன்பது மாத கருவை தாங்கிக்கிட்டு என்னாலே நடக்கமுடியுமா?"

" இங்கே இருந்து பசி தாங்காம சாவதைவிட, நடந்து பார்ப்போமே!"

" போகிற வழி தெரியுமா?"

" ஹைதராபாத் போகும் வழின்னு போர்டு போட்டிருக்கான்..அதிலே, போகவேண்டியதுதான்!"

வேறு வழியின்றி, இருவரும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவு, துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.