(Reading time: 10 - 20 minutes)

கூட்டத்தில் இருந்த ஒருவர் அருகிலிருந்த வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த பெரியவரை வெளியே அழைத்துவந்து ரித்திகாவைக் காட்டி, அவர் வீட்டில் அடைக்கலம் தர, அனைவரும் அவர் காலில் விழுந்தனர்.

அந்தப் பெரியவரும் குமாரும், ரித்திகாவை தூக்கிச் சென்று, அவர் வீட்டில் இருந்த கட்டிலில் கிடத்தினர்.

அடுத்த பிரச்னை, யார் பிரசவம் பார்ப்பது?

அங்கிருந்த பெண்களில் எவருக்கும் பிரசவம பார்க்கத் தெரியாது.

ரித்திகாவோ வலி தாங்கமுடியாமல், புரண்டு தவிக்கிறாள். குமார் அதைப் பார்த்து தாங்கமுடியாமல், ஓவென கதறினான்.

பெரியவர், எல்லோரையும் வெளியேற்றி விட்டு குமாரைமட்டும் தன் அருகில் வைத்துக்கொண்டு, " எனக்கும் பிரசவம் பார்க்கத் தெரியாது, ஆனால் அதற்காக, சும்மா இருந்தால், இவள் வலி தாங்கமுடியாமல் செத்துப்போய்விடுவாள். நாம் ரித்திகாவுக்கு பிரசவம், நமக்கு தெரிந்தவரையில் பார்ப்போமா?" எனக்கேட்டார்.

வேறு வழியின்றி, குமாரும் இசைந்தான்!

ரித்திகாவின் கால்களை அழுத்திப் பிடித்துக்கொள்ள குமாரிடம் சொல்லிவிட்டு, பெரியவர், ரித்திகாவின் வயிற்றை அமுக்கி ஐந்தாவது நிமிடத்தில், சிசுவை வெளியே கொண்டுவந்தார்.

கதவை திறந்து, அங்கு இருந்த பெண்களை மற்ற உதவிகளை செய்யச் சொல்லிவிட்டு, பெரியவர் கைகழுவச் சென்றார்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டபின் இறைவன் படத்தின்முன் நின்று கண்ணீருடன் கைகூப்பி, " குருட்டு தைரியத்தில், துணிந்து பிரசவம் பார்த்தேன். தவறு ஏதாவது நடந்து அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால், என் கதி? இறைவா! உன் கருணையை என்சொல்வேன்!"

அவர் காலில் குமார் விழுந்து, " ஐயா! எனக்கு நீங்கதான் கண்கண்ட தெய்வம்!" என்று அழுதான்.

" தம்பி! நீ யாரோ, நான் யாரோ? உங்க கூட்டத்திலே யாரோ ஒருவர் என் வீட்டுக்குள்ளே நுழைந்து உதவி கேட்பானேன்? பெண்கள் எவருக்கும் பிரசவம் பார்க்கத் துணிவு வராதபோது, எனக்கு எப்படி துணிவு வந்தது?

காரணம், மனிதன் எவன் ஒருவனுக்கும் தெரியாது!

இந்த உலகத்தையே மிரட்டுகிற தொற்று வருவானேன்? உனக்கு வேலை போய், நீயும் அவளும் வேறுவழியின்றி நடைப்பயணம் செய்வானேன்?

இவை எதற்குமே, இங்கு உள்ள யாருக்கும் விடை தெரியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.