Page 16 of 40
மறுபக்கம் கதிரேசனோ வீர நடை போட்டு நேராக ராபர்ட் வீட்டிற்குச் சென்றார்
”ராபர்ட்டு எலேய் ராபர்ட்டு” என சத்தமாக அழைக்க அவனும் வந்தான்
”பெரிசு என்ன இந்த பக்கம்”
”பலகாரம் கொடுக்க வந்தேன் இந்தா” என சொல்ல பலகார தூக்கைக் கண்டதும் ஆர்வமாக வந்தான் ராபர்ட்
”பலகாரமா கமலாம்மா செய்ததா சூப்பராயிருக்குமே, 5 வருஷத்துக்கு முன்னாடி சாப்பிட்டது, அப்புறம் இப்பதான் சாப்பிடறேன் ஆமா திடுதிப்புன்னு என்ன பலகாரம்லாம் செய்திருக்காங்க என்ன விசேஷம்”
”அவள் புள்ளை வரான்ல அதுக்குத்தான்”
”ஏன் உன் புள்ளைன்னு சொல்ல மாட்டியோ”
”பேச்சை குறைடா பலகாரத்தை சாப்பிடு”
”இரு அப்பறம் சாப்பிடறேன்“
”ஏன் இப்ப சாப்பிட்டா என்ன“
”வேலையா இருக்கேன்யா”
“என்னத்த வேலை”
”உள்ள வா சொல்றேன்”
”நானா” என தயங்க