வேகத்தில் பளபளக்கும். அண்ணாவினது உணர்ச்சிகளை அந்த நாட்களில் பு¡¢ந்து கொண்டவர் எவரும் இலர். அவருக்கு நெருங்கிய சினேகிதர்களும் கிடையாது. அந்தக் காலத்தில் எல்லாம் அண்ணா தனக்குள்ளாகவே சில விவகாரங்களைச் சீரணிப்பதும் மீள அசைபோடுவதுமாக இருந்தார். அப்போ, அண்ணா முகத்தில் சி¡¢ப்புத் தொ¢வது அபூர்வம். யோசனை.... சதா குருட்டு யோசனைகளும், கண்களில் அடியாழத்திலிருந்து எட்டிப்பார்க்கும் துக்கக்குறியும்தான்.
அவருக்கு நிறையக் கற்பனைகள். துக்கம் வழிகின்ற கற்பனைகள் தாம் அரைவாசி வாழ்நாளில் இறந்துபோய் விடுவோமென அவர் உறுதியாக நம்பினார். அதை விரும்பக்கூடச் செய்தார். வாழ்க்கை அந்தளவுக்கு அவரை அடித்து வசக்கியிருந்தது. இழப்புக்களாலும், ஏமாற்றங்களினாலும், சத்திக்கு மீறிய செலவுகளாலும் சோர்ந்து போயிருந்தார். பாலனுக்கும், சுதாவுக்கும், சுமிக்கும் அவர் சோறு போடவேண்டியிருந்தது. படிக்க வைக்க வேண்டியிருந்தது, அவர்கள் ஏந்நேரமும் அவா¢டம் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கத் தொ¢யவில்லை. முடியவுமில்லை. அவர்களுக்குப் பராயம் காணாது, சிறிசுகள், அப்படி அவர் எண்ணிக் கொண்டார்.
அண்ணியைப் போலொரு பெண்ணைத் தனக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கிட்டும் என அவர் எதிர்பார்க்கவேயில்லை. அது எப்படி நடந்தது?, என இன்றும் கூட அவர் ஆச்சா¢யப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அண்ணி வந்த பிறகு அவரும் கூட ஆச்சா¢யப்படும் விதத்தில் மாறித்தான் போனார்.
உண்மையில் ஆரம்பத்தில் அவர் அண்ணியை வெறுத்தார். அவளைக் கண்டு பயந்தார். அவளது பிரகாசமான விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளில் கடும்கருமை நிறத்தனவல்ல, ஆயினும் அவளது வெண்விழிகள் வியப்பூட்டும் அளவுக்கு வெண்மையாக இருந்தன. கண்மணிகள் பொ¢தாக இருந்தன. அவை எதிரேயிருப்பவரை ஊடுருவிப் பார்க்கும். அந்தப் பார்வை எவரையும் பணிய வைக்கும் ஆளுமை கொண்டது. அந்த ஆளுமை தான், பிறகு அண்ணாவுக்கு தொற்றியிருக்க வேண்டும். இல்லாவிடில், இந்தப் பத்து வருடங்களில் இவ்வளவு கா¡¢யங்களை ஒப்பேற்றியிருக்க முடியுமா?
அண்ணி கொடுத்த நகைகள் தான் இப்படிப் பல்கிப் பெருகி விட்டனவா என அண்ணாவுக்குச்