(Reading time: 18 - 36 minutes)
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்

எப்போதும் இருப்பாள். கிணறு பழுதுபார்க்கச் சொல்லி அவா¢டம் சொல்லிச் சொல்லி அலுத்து, கடைசியில் தானே முன்னின்று முடித்து விட்டாள். தொப்பிக் கட்டும், உட்சுவரும் ஆங்காங்கே புதிய பூச்சுக்களைக் காட்டி இளித்தன. இறைந்து விட்ட நீர்வளவெங்கும் ஓடித்தேங்கியதில் காற்று ஈரத்தையும் இலேசான சேற்று வாசனையையும் சுமந்து தி¡¢கின்றது. தேங்கிய நீ¡¢ல் நட்சத்திரங்களும், குறைநிலவும், வீட்டின் பிரகாசமான வெளிவிளக்குகளும் பிரதிபலித்துத் தொ¢ந்தன. அவற்றைப் பார்த்தபடியே எண்ணி சற்றே தூங்கிவிழுந்தாள். நேற்றிரவு தூக்கமில்லை. இன்னும் எப்படியோ?

   

சுதா நாளைக்குப் போகப்போகிறாள். தலைக்கு மேலே இன்னும் வேலைகள் காத்துக்கிடக்கின்றன. கூடவே பி¡¢வும் அண்ணியின் இதயத்தை தொட்டழுத்தியது.

   

2

   

விடிகாலையில் சுதா பயணமாகிறாள்.

   

சுமி வந்திருந்தாள். வேறும் பலர் வந்திருந்தார்கள். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் அண்ணாவைக் கண்டும் காணாமலே போனவர்கள் தான். இப்போதோவெனில், தமது சமூகத்தை அண்ணா காணாமல் விட்டுவிடுவாரோ என அச்சபடுவர்களாகக் காணப்பட்டனர். பெண்கள் அண்ணா பார்வையில் படும்படி நடமாடினர். ஒருத்தியோவெனில் கெளசிக்குட்டிக்கு முத்தம் கூடக் கொடுத்தாள். வல்லவன் வீட்டுப் பெண்ணல்லவா? ஆண்களெல்லாரும் அண்ணியைச் சூழ உட்கார்ந்து அரசியலும், விலைவாசியும் பேசினார்கள்.

   

அண்ணாவுக்கு நிறைய வேலைகள். அங்குமிங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்தான். கெளசிக்குட்டி அம்மாவின் சேலைத்தலப்பை பிடித்துக்கொண்டு பின்னாலேயே இழுபட்டது. அம்மா, பொ¢ய பொ¢ய பெட்டிகளில் விதவிதமான பளபளக்கும் சாறிகளும், தின்பண்டங்களம் திணித் திணிய அடுக்குவதைப் பார்த்து. சுதா அன்¡¢யை இழுத்து வைத்துக்கொண்டு அம்மா கொஞ்சலும் சி¡¢ப்புமாக ஏதேதோ சொல்வதைக் கண்டது. ஆனால் சுதா அன்¡¢ அழுதாள். அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதாள். அம்மாவும் கூடத்தான் கொஞ்சமாக அழுதாள். அம்மா முகத்தில் இட்ட பொட்டு கரைந்து வழிந்தது. ஏற்கனவே சிவந்த அம்மாவின் முகம் மேலும் சிவந்து போயிற்று. அதைத் துடைக்க நேரமில்லாமல் அம்மா குசினிக்கும், அறைகளுக்கும், ஹோலுக்குமாக ஓடித்தி¡¢கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.