மேசையடியில் உட்கார வேண்டும், என்பதில் அண்ணாவுக்கு நிறைய ஆசை. ஆனால் அவள் உட்கார்ந்தது கிடையாது, உடனேயே போய் விடுவாள். எல்லாமே வெறிச்§¡டி விட்டது போல ஆகிவிடும் கடைச் சிப்பந்திகள் வாட்டமுற்றது போலக் காசு எண்ணியெண்ணி மாளாது. சாம்பிராணியுடன் மிளகாயும், உப்பும் இட்டுப் புகைக்கும் போது மிளகாயின் காரநெடி உறைப்பதேயில்லை. 'படபட'வென பொ¡¢ந்து வெடிக்கும்.
"இலட்சுமி கடாட்சம்...இலட்சுமி கடாட்சம்" என்கிறார்களே; அது இதுதான் போலும்!
எல்லோருக்கும் அண்ணி எதைக் கொடுத்தாள் என்று சொல்வது கடினம், பாலன், சுமி, சுதா எல்லாரும் அண்ணியைச் சார்ந்தவர்களாகி விட்டனர். கெளசல்யாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. அண்ணி நொந்து பெற்ற பெண்ணில்லையா அவள்? அண்ணாந்து அவர்கள் இப்போ தொந்தரவு படுத்துவது கிடையாது. அதிலும் இந்தச் சுதா- அண்ணி வந்த போது ஒரு சின்னப்பெண்ணைப் போன்று அவளைத் தொட்டுப் பார்த்து கையை இழுத்துக் கொண்டவள்- அண்ணியுடனேயே ஒட்டிக்கொண்டாள். அவளைப் பி¡¢ந்தால் அண்ணியின் உடலிலிருந்து உதிரம் பெருகும் என்பதென அண்ணிக்கும் அவள் மீது விசேஷப்பற்றுதல்.
அந்த சுதா இனிப் போய்விடுவாள். இன்னும் ஒரேயரு நாள். அப்புறம் போய்விடுவாள். அண்ணியை விட்டுப் பி¡¢ந்தே இராத சுதா பஸ் ஏறி....பிளேன் ஏறி, அவளுக்கு¡¢யவனிடம் போயே விடுவாள். 'அவன்' அண்ணிக்கு தூரத்து உறவுமுறையில் தம்பியாக வேண்டும். அவர்களுக்குள் முடிச்சுப் போட்டு வைத்தவளும் அண்ணி தான்.
முதுலில் சுதா பிணங்கினாள், பயந்தாள்.
"அந்த ஆள் வில்லன் மாதி¡¢ இருக்கிறான்..." என்றாள்.
அண்ணி தேறுதல் சொன்னாள்.
"உங்கடை அண்ணா.... அப்ப, பொ¢ய முனிவர் மாதி¡¢ இருந்தாரே!...இப்ப எப்பிடி? எனக்கு என்ன குறைவைச்சார்.... அதெல்லாம் சா¢வரும்...."
அப்படிச் சொல்கிற போது அண்ணியின் குரலில் ஒரு குறை இடறிற்று.