சொல்லத் தொ¢யவில்லை. அவரால் ஆச்சா¢யப்பட மட்டுமே முடிகிறது.
கல்யாணமான புதிதில் ஒரு நாளிரவு; தனது நகைகளையும் தன்னையும் முழுமையாகக் கழற்றி அண்ணாவிடம் அவள் கொடுத்தாள். அன்றிலிருந்து அண்ணா புதுமனிதராகி விட்டார். அவரது துக்கரமாக சிந்தனைகள் குடியோடிப் போயின. அவர் வாழ விரும்பினார். உலக இன்பங்களை மிகுந்த வெறியுடன் காதலித்தார். அவரது மனதில் புதுத்தெம்பு பிறந்தது. கன்னங்கள் சற்றே மெழுகினாற் போல, தசைப் பிடிப்புள்ளவாகின. மேனி மினுங்கிற்று.
ஆனால், அண்ணி அதற்குப் பிறகு நகைகள் அணிவதைத் தவிர்த்து வந்தாள். இரண்டே வருடங்களில் அவள் கொடுத்ததை விட பத்துமங்கு நகைகள் செய்யுமளவுக்கு அண்ணா 'பொ¢ய மனிதர்' ஆகிவிட்டார். செய்து செய்யுமளவுக்கு அண்ணா 'பொ¢ய மனிதர்' ஆகிவிட்டார். செய்து கொடுக்கவும் செய்தார். ஆனால் அவள் அணிவதில்லை. இப்போதெல்லாம், காதுகளில் வெகு சாதாரணமான தோடுகளை மட்டும் அணிகிறாள். அதுவொன்றே அவளது கீர்த்தி வீசும் முகத்துக்கு வெகு சோவையை அளிக்கிறது. அவள் நெற்றியில் பொ¢ய வட்டமாக குங்குமம் குலங்கும். அது தான் அவளது உண்மையான ஆபரணம். அது மிகுந்த கவர்ச்சியை அளிக்கிறது. சிவந்து விழிக்கிறது. அந்தத் திலகத்தினால் அவள் அண்ணாவைச் சுண்டிச்சுண்டித் தன்பால் இழுத்தாள்.
கடை ஆரம்பித்த புதிதில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளாது. ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி, வீட்டுக்கு ஓடிஓடி வருவார். அண்ணியோ வெனில், குறும்புக் குறுஞ்சி¡¢ப்புடன் திரும்ப ஓடஓட விரட்டுவாள்.
"இவ்வளவு காலமும் 'ஙே...ஙே' எண்டு மேகத்தைப் பார்த்து முழிச்சது போதாதா...ஓடுங்கோ, கடைக்கு ஓடுங்கோ...."
அண்ணா திரும்பிச் செல்வார். நடந்துதான் போவார். அதில் அவருக்கு பொ¢ய சுகம் தொ¢ந்தது. கடை கூப்பிடுதூரம்தான். பிறகு, கார் வாங்கிய பின்பும் வீட்டுக்கும் கடைக்கு மிடையே நடைதான். கார் வீட்டின் முன்புறம் அலங்காரமாக நிற்கும். அண்ணியை விடவும் இந்த ஜடங்கள் வீட்டுக்கு அணிகலனா, என்ன? எதி¡¢ல் வரும் கா¡¢ன் பின்சீற்றிலிருந்து முகம் நிறைந்த சி¡¢ப்பும், கும்பிடுகளும் எட்டிப்பார்க்கும். சைக்கிள்களோவெனில், 'ஸ்லோ' பண்ணி