வந்தனம் தொ¢வித்தபடி போகும். அவையெல்லாம் 'தனக்கா, தனக்கா' என அண்ணா ஆச்சா¢யப்படுவார்.
"அவளுக்கு, அவளுக்கு!" என முணுமுணுத்தபடி ஏறுநடை போடுவார். அவருக்கு இப்போ சாடையாகத் தொந்தி வைத்துவிட்டது. அண்ணிஅதில் அடிக்கடி செல்லமாகக் குத்துவாள்.
"செல்லவண்டி...கள்ளவண்டி....." என்பாள்.
'அவளால்..., அவளால்!" என்றபடி கடைவாசல்படியை அழுந்த மிதித்து ஏறுவார்.
எதிர்புறமிருந்து 'ஜோன்சன்' முதலாளி கண்களை மிகச் சிறப்பித்துக் காட்டும் கண்ணாடியினூடாக ஓரப்பார்வை பார்த்தபடி அண்ணாவை வம்புக்கிழுப்பார்.
"என்ன முதலாளி...வீட்டை போய் வாறியளோ....?"
எமகாதகன்; ஆள் சா¢யான ஜொலிப் பேர்வழி
"ஊம்...ஊம்" என அண்ணா முனகுவார்.
"தண்ணி விடாய் போலை..கெஹ்கெஹ்ஹே...விடாய்க்கும்! விடாய்க்கும்!! ஹி...ஹி..."
ஜோன்சன் முதலாளியின் பொ¢ய தொந்தி சி¡¢ப்பால் தழுமபிக் குலுங்கும் அண்ணா மானசீகமாக ஜோன்சன் முதலாளியின் தொந்தியில் ஒரு குத்து விடுவார். பிறகு, எதிர்படுகிற பையனை காரண கா¡¢யமற்று விரட்டுவார்.
அண்ணா தான் ஓடிஓடி அண்ணியைப் பார்க்கப் போவார். அவள் கடைக்கு வருவது அபூர்வம். விரல் விட்டெண்ணக் கூடிய தடவைகளே வந்திருக்கிறாள். அந்நேரங்களில் கடை நிறைந்து விடும். றாக்கைகள், ஷோகேஸ்கள் எல்லாம் கொள்ளாமல் வழிவன போல இருக்கும். கடையில் கால்வைக்க இடம் பற்றாது என மொழியத் தோன்றும். ஒரு கோடி சூ¡¢யப் பிரகாசமுள்ள அ¡¢ய வஸ்து உள்ளே நுழைந்து விட்டதென, ஒரு வசீகரத் தோற்றம் கிடைக்கம், அண்ணி சிலநொடி நேரம்தான் நிற்பாள். அவள் நெடுநேரம் நிற்க வேண்டும், கல்லா