(Reading time: 23 - 46 minutes)
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்

   

“என்ன சௌபர்ணிகா உன்னை டிஸ்ஸபாயின்ட் செய்துட்டேனா? புரட்சி செய்து புதுமை பெண்ணுன்னு பேர் எடுக்க இந்த இடத்தில் எனக்கு விருப்பமில்லைம்மா... உங்க அம்மா எப்படி உங்க குடும்பத்திற்காக அத்தனை யோசிக்குறாங்களோ, அதே போல் நானும் வேற ஒரு கசப்பான விஷயத்திற்கு யோசிக்குறேன்...”

   

என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தாள் சௌபர்ணிகா. 

   

“உன்னை பார்க்கும் போது என்னையே சில வருஷங்கள் ரிவைண்ட் செய்து பார்ப்பது போலிருக்கு... யூ ஹேவ் அமேஸ்ட் மீ...”

   

சௌபர்ணிகாவின் முகம் மலர்ந்தது...

   

“எனக்கு தெரியும் நான் உன்னை ஒரு வார்த்தை கூட பாராட்டியதில்லை... உன்னை பாராட்டும் அளவிற்கு நான் பெரிய ஆளும் இல்லை...”

   

“என்ன மேடம் இப்படி சொல்றீங்க! நீங்க ஒரு வார்த்தை சொல்வதே எனக்கு அவார்ட் கிடைத்தது போல் பெருமையா, சந்தோஷமா இருக்கு...”

   

“ஹா ஹா... மற்றபடி எப்படியோ இந்த விஷயத்தில் நீ என்னுடைய வாழ்க்கையை வைத்து பாடம் கற்றுக் கொள்ளலாம்... உனக்கு ஜர்னலிசம் பிடிச்சிருக்கு, ஓகே... ஆனால் இது மட்டும் வாழ்க்கைன்னு நினைக்காமல் லைஃபை சரியா பேலன்ஸ் செய்து வாழ் கத்துக்கோ...”

   

“புரியுது மேடம்...”

   

“அதே போல் கல்யாணம்னு வரும் போது, மனசு விட்டு பேசி முடிவு செய்... பேசினாலே பல பிரச்சனைகள் தீர்ந்திடும்... உன்னை புரிஞ்சுக்கனும்னு மட்டும் எதிர்பார்க்காமல் நீயும் அவருடைய ஆம்பிஷன் எதிர்பார்ப்புக்களை புரிந்துக் கொள்ள முயற்சி செய்... என்னுடைய கசப்பான அனுபவத்தில் இருந்து சொல்றேன்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.