(Reading time: 23 - 46 minutes)
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்

“புரியுது மேடம்...”

   

“எது எப்படியோ, நம்ம அப்பார்ட்மென்ட்டில் என்னால் சில பேருக்கு இன்னும் கொஞ்ச நாளுக்கு என்டர்டேயின்மென்ட் உண்டு...”

   

“...”

   

“என்ன பார்க்குற, உங்க சித்தியையும் சேர்த்து தான் சொல்றேன்...”

   

“அது...”

   

“விடும்மா... அவங்க கதை எல்லாம் என்னை விட மோசம்... இப்படி ஏதாவது பேசுவது மூலமாவது அவங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும்னா கிடைச்சிட்டு போகட்டும்... அவர்களை பொறுத்தவரை ஒரு விதமான வட்டத்துள் வாழ்பவள் தான் பெண்... இப்போ நான் அழுது புலம்பி இருந்தால் என்னையும் அவர்கள் வட்டத்துள் ஒருத்தியாக நினைத்திருப்பாங்க...”

   

எதுவுமே இவளை அசைக்காதா?

   

ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சௌபர்ணிகா!

   

“சரி சௌபர்ணிகா, நான் இங்கே இருந்து கிளம்பி அவரை சந்திக்க போறேன், நீ தனியா ஆபிஸ் போயிடுவ தானே? சாரி உனக்கு கிராண்டா சென்ட் ஆப் கொடுக்கனும்னு நினைச்சேன்...”

   

“உங்களோட மூணு மாசம் வேலை செய்ய கிடைச்ச வாய்ப்பை விட பெரிய பரிசு எதுவுமே இல்லை மேடம்! ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...”

   

"தேங்க்ஸ்ம்மா...  இஃப் எவ்ரி திங்க்ஸ் கோ ஃபைன், மீண்டும் ஒரு எம்ப்ளாயியாகவே நீ பெண்சக்தி வர வாய்ப்பு கிடைக்கலாம்... என்ன பார்க்குற, எஸ் ஐ ஹாவ் ரெக்கமேண்டேட் யுவர் நேம்..." 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.