தடவை எனக்கு கால் செய்திருந்த போலும்...”
எந்த காரணத்தை சொல்வது என்று புரியாமல்,
“எஸ் மேடம்...” என்று தடுமாறினாள் சௌபர்ணிகா.
“எதுவா இருந்தாலும் வேலையை முடிச்சிட்டு பேசலாம், இன்னைக்கு இதை முடிச்சாகனும்... இன்னைக்கு உன்னுடைய லாஸ்ட் டே ஆச்சே...”
“எஸ் மேடம்...”
அதன் பின் இருவரும் மற்ற விஷயங்களை பின்னுக்கு தள்ளி விட்டு வேலையில் ஆழ்ந்தனர். கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணி அளவில் கட்டுரையை முடித்தனர்...
“வா சௌபர்ணிகா, நான் உன்னை லஞ்சுக்கு அழைச்சிட்டு போறேன்...”
மறுக்காமல் உடன் சென்றாள்...
ஹோட்டலில் ஓரமான, அமைதியான இருக்கையை தேர்வு செய்து அமர்ந்தனர்.... வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு,
“சொல்லு சௌபர்ணிகா, என்ன அத்தனை போன் கால்...”
“அது ஒண்ணுமில்லை மேடம்... சாரி... ம்ம்ம்...”
“என்ன ஆச்சு?”
“இல்லை நீங்க... வந்து...”
கஸ்தூரியின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது...