“தேங்க்ஸ் மேடம்...” என்ற போது சௌபர்ணிகாவின் குரலிலும் ஏமாற்றம் தெரிந்தது.
அதை புரிந்து தானோ என்னவோ அவளை நேராக உற்று பார்த்த கஸ்தூரி மேலே எதுவும் கேட்காது தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.
🌼🌸❀✿🌷
ஐ.பி.எல் கிரிக்கெட் மேட்சில் ஆழ்ந்திருந்த சௌபர்ணிகா அவளின் மொபைல் அழைப்பதை உணர்ந்து எடுத்து பார்த்தாள். அழைப்பது கஸ்தூரி என தெரிந்து, அவசரமாக வெளியே வந்து பேசினாள்.
“ஹலோ மேடம்... சொல்லுங்க மேடம்... ஏதாவது மிஸ் செஞ்சுட்டேனா?”
“ஹலோ சௌபர்ணிகா... நோ நோ... அதெல்லாம் இல்லை... நீ ஆர்ட்டிகில் ப்ரிப்பேர் செய்ய ஹெல்ப் செய்தியே சரஸ்வதி, அவங்களோட பேச நாளைக்கு போகலாம்னு இருக்கேன், நீயும் கூட வரீயா? உனக்கும் ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்?”
அவ்வளவு தான் சௌபர்ணிகாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை...
“ஷ்யூர் மேடம்... எப்போ கிளம்பனும் சொல்லுங்க...”
அன்று முழுவதும் சௌபர்ணிகாவிற்கு கால்கள் பூமியில் நிலைக் கொள்ளவில்லை... கடவுளை நேராக கண்ட பக்தன் போல, சச்சினுடன் ஒரு நாள் செலவழிக்க வாய்ப்பு கிடைத்த கிரிக்கெட் ரசிகன் போல துள்ளலுடன் கஸ்தூரியுடன் அந்த பேட்டிக்கு கூட சென்றாள். ஒவ்வொரு வினாடியையும் ஆர்வத்துடன் ரசித்து அனுபவித்தாள்...
மாலையில் அலுவலகம் திரும்பும் வழியில் இருவரும் காபி டே சென்றனர்... கஸ்தூரி சௌபர்ணிகாவிடம் அவளின் குடும்பம் பற்றி, வருங்கால திட்டங்கள் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டாள்.