“வித் ப்ளெஷர் மேடம்...”
கஸ்தூரி சௌபர்ணிகாவிடம் வேலையை பற்றி விளக்கி கொண்டிருந்த போது, அவளின் தொலைபேசி ஓசை எழுப்பியது. சௌபர்ணிகாவிடம் சொல்லி விட்டு எடுத்து பேசியவளின் முகம் மலர்ந்து பிரகாசித்தது...
“குட் மார்னிங்.. சொல்லுங்க எப்படி இருக்கீங்க?”
இங்கிதமாக கவனிக்காமல் இருந்தாலும் சௌபர்ணிகாவிற்கு கஸ்தூரி பேசுவது யாரிடம் என்பது புரிந்து போனது... கஸ்தூரியின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியும் அந்த பரபரப்பும் அதை பறைசாற்றின... முன்தினம் கோமதி பேசியது அவளின் நினைவில் வந்தது... மற்றவரை பற்றிய விபரம் தெரியாமல் பேசுவது எத்தனை எளிதாக இருக்கிறது!
🌼🌸❀✿🌷
கஸ்தூரி அடுத்து எழுத இருந்த கட்டுரைக்கு விஷயம் தேர்வு செய்ய வேண்டி இருந்தது... பல ஊர்களில் இருந்து பல பெண்களை பற்றிய விபரங்கள் வந்திருந்தன... அதை பற்றி எல்லாம் மேலும் விபரங்கள் சேகரித்து சௌபர்ணிகா முன்னுரிமை (priority) கொடுத்து அடுக்கி கஸ்தூரியிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி ஆராய்ந்த கஸ்தூரி,
“ஏன் இவங்களுக்கு ப்ரையாரிட்டி கொடுத்திருக்க சௌபர்ணிகா?” என்றாள் ஆர்வத்துடன்.
கஸ்தூரி காட்டிய தாளில் கண்களை ஓட விட்ட சௌபர்ணிகா,
“நெஞ்சை உருக்கும் கதை, கண்ணீர் கதைன்னு சொல்வதை விட கொஞ்சம் பாசிட்டிவான விஷயம் சொன்னால் நல்லா இருக்கும்னு தோணிச்சு மேடம்... இவங்களுக்கு படிப்பில்லை, கல்யாணம் செய்துக் கொண்டவனும் விட்டுட்டு ஓடி போய்ட்டான், வேற யார் ஆதரவும்