சௌபர்ணிகாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை கவனித்த கோமதி,
“தெரியாமல் என்ன? எல்லாம் தெரியும்...”
கோமதி சொன்ன தோரணையில் திடுக்கிட்டு பார்த்தாள் சௌபர்ணிகா.
“என்ன பார்க்கிற? நீ சொல்லும் அந்த பெண்சக்தி நடத்துற கஸ்தூரி இதே அபார்ட்மென்ட்டில் தான் இருக்கா... பொம்பளையா அவ! சரியான தலை கணம் பிடிச்சவ... எங்களை எல்லாம் பார்த்தால் பேச கூட மாட்டாள்... இவள் எல்லாம் பெண்கள் எப்படி இருக்கனும்னு சொல்ற பத்திரிக்கை நடத்துறா... எல்லாம் நேரம் தான்...”
சௌபர்ணிகாவிற்கு கோபம் வந்தது...
“என்ன சித்தி இப்படி சொல்றீங்க? அவங்க ஒரு பெரிய ஜர்ணலிஸ்ட்...”
“என்ன மண்ணாங்கட்டியோ போ... அவளுடைய புருஷன் ஊர் ஊரா அலையுற வேலை செய்றான்... பெரிய பணக்காரன்... இவள் அவனையும் குழந்தைகளையும் கவனிப்பதை விட்டுட்டு இதை செய்றேன் அதை செய்றேன்னு சுத்திட்டு இருக்கா... அவளும் அவளுடைய உடையும் நடையும்...”
சௌபர்ணிகா பதில் சொல்லவில்லை... பதில் சொல்ல விரும்பவில்லை... அதற்கு மேல் கஸ்தூரி பற்றி கோமதியுடன் பேசாமல் குளிக்க போவதாக சொல்லி சென்றாள்.
🌼🌸❀✿🌷
காலையிலேயே நேரத்திற்கு கிளம்பி ராயபேட்டையில் இருந்த பெண்சக்தி அலுவலகத்தை அடைந்த சௌபர்ணிகாவின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. அவளின் பல வருட கனவு நனவாக போகிறது...
அவளின் விபரங்களை சரி பார்த்த உதவி ஆசிரியராக பணியாற்றிய ஆஷா, அவளை