ஆர்வத்துடன் பார்த்தாள்.
“கஸ்தூரி மேடம் கூட வேலை செய்ய இத்தனை ஆர்வமா? பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி இருக்க, இங்கிலீஷ் பேப்பர் செலக்ட் செய்திருந்தா நல்லா ஷைன் ஆகி இருந்திருக்கலாமே...”
“ஜர்னலிஸ்ட் ஆகணும் எனும் என்னுடைய கனவில் நான் எடுத்து வைக்கும் முதல் அடி இது... என்னுடைய ரோல் மாடல் கஸ்தூரி மேடம் தான்... அவங்களிடம் ட்ரெயினிங் எடுத்து என் கரியர் ஆரம்பிப்பது ட்ரீம் கம் ட்ரூ போல...”
“அத்தனை ஆர்வமா? கேட்க சந்தோஷமா இருக்கு, ஆனால் இது ஈசியா இருக்காதுப்பா...”
“என்ன சொல்றீங்க மேடம்?”
“கஸ்தூரி மேடம் ரொம்ப டிமான்டிங் டைப்...”
அதுவரை அமைதியாக அருகில் இருந்த மற்றொரு பெண்மணி,
“டிமாண்டிங்கா? பிழிஞ்சு எடுத்திருவாங்க... மூணு மாசம் தானே உன்னுடைய ட்ரெயினிங்? தூக்கம், ப்ரீ டைம் எல்லாத்தையும் மறந்திடு...”
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை மேடம்... தூங்காமல் வேலை செய்ய கூட நான் ரெடி தான்...”
“பார்க்க தானே போறோம் நாங்களும்... சரி வா உனக்கு அவங்க ரூம் காட்டுறேன்... அதற்கு பக்கத்திலேயே உனக்கு சின்ன கேபின் இருக்கு...”
சௌபர்ணிகா அவளுக்காக தர பட்டிருந்த அந்த கேபினை ஆர்வத்துடன் பார்த்தாள். கஸ்தூரியின் அறையிலேயே சின்னதாக அவளுக்கு இடம் ஒதுக்க பட்டிருந்தது. அங்கே தெரிந்த கஸ்தூரியின் மேஜையை கோவில் சன்னிதானத்தை பார்ப்பது போல் மரியாதையுடன் பார்த்தாள். அங்கே தெரிந்த புகைப்படம் அவளின் ஆர்வத்தை தூண்டியது. ஆஷா கஸ்தூரி வர இன்னும் சில மணித்துளிகள் ஆகும் என்று சொல்லி இருந்தாள்...