(Reading time: 23 - 46 minutes)
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்

இல்லை, ஆனாலும் மனம் தளராமல் தனியா நின்னு பசங்களை வளர்த்து ஆளாக்கி இருக்காங்க... சின்ன ஹோட்டல் முதலாளி என்ற போதும், தனியா நின்னு தைரியமா சாதிச்சிருக்காங்க... அவங்களை போல் கஷ்டப் படும் பல பெண்களுக்கு உதவி செய்துட்டு இருக்காங்க...”

   

சௌபர்ணிகாவை ஒரு பார்வை பார்த்த கஸ்தூரி, மேலே அதிகம் பேசாமல்,

   

“ஓகே... இவங்களை வைத்தே ஆர்ட்டிகில் எழுதுவோம்... மேலே நியூஸ் கலக்ட் செய்...” என்றாள்.

   

கஸ்தூரி அவளை புகழ்ந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை ஆனாலும் அவள் தேர்வு செய்த விஷயத்தையும், சொன்ன காரணத்தையும் அவள் ஏற்றுக் கொண்டதே சௌபர்ணிகாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது...

   

 🌼🌸❀✿🌷

   

அடுத்து வந்த நாட்கள் அசுர வேகத்தில் சென்றன... சௌபர்ணிகாவிற்கு கஸ்தூரி மீதிருந்த மதிப்பு பன்மடங்கு அதிகரித்திருந்தது... கஸ்தூரிக்கு அந்த துறையின் மீது இருந்த ஆர்வமும், அதை அவள் செயலாற்றிய விதமும், மற்றவரிடம் வேலை வாங்கிய பாங்கும் அவளை பெரிதும் கவர்ந்தன... ஏற்கனவே கஸ்தூரியின் மீது பெரிதும் அபிமானம் வைத்திருந்தவள் இப்போது அவளுடன் வேலை செய்ய கிடைத்த வாய்ப்பில், அவள் மீது மேலும் பன்மடங்கு அபிமானமும் மரியாதையும் கொண்டாள்.

   

முதல் நாள் மற்றவர்கள் எச்சரித்தது போல் வேலை அதிகமாக தான் இருந்தது... கஸ்தூரிக்கு அனைத்து வேலையும் பூரணமானதாக, குறையில்லாததாக இருக்க வேண்டும்... முதல் முதலாக பணியாற்றுவதால் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சௌபர்ணிகா திணறி திண்டாட வேண்டி இருந்தது... ஆனாலும் மனமுவந்து செய்யும் வேலை என்பதால் விரைவிலேயே கஸ்தூரி எதிர்பார்க்கும் விஷயங்களை புரிந்துக் கொண்டாள்... கஸ்தூரி எள் எனும் முன் எண்ணெயாக நிற்கும் நிலைக்கு வந்திருந்தாள்...

   

கஸ்தூரி சொந்த விஷயங்களை பேசுபவள் இல்லையென்ற போதும் அவள் அவளின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.