(Reading time: 23 - 46 minutes)
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்
சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்

   

ஆர்வம் மேலோங்க எழுந்து மேஜையின் அருகில் சென்று அங்கே இருந்த அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தாள். அதில் பலமுறை அவள் புகைப்படங்களில் பார்த்திருந்த கஸ்தூரி ஒரு ஆண்மகனுடன் இருந்தாள்.

   

மேடமின் கணவர் போலும் என மனதினுள் நினைத்துக் கொண்டவள், அந்த படத்தில் கஸ்தூரியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை ரசித்தாள்... யாராக இருந்தாலும் தன்னுடைய மனதிற்கு பிடித்த ஒருவருடன் இருக்கும் போது மற்ற முகமூடிகள் கிழிபட்டு தான் போய் விடுகின்றன...

   

அறையின் கதவு திறக்கப் படும் ஓசைக் கேட்டு திரும்பி பார்த்தவள், கஸ்தூரி உள்ளே வருவதை கவனித்து அவசரமாக புகைப்படத்தை மீண்டும் மேஜையில் வைத்தாள். அதற்குள் அருகில் வந்துவிட்டவளை பார்த்து, முகமெல்லாம் பல்லாக, பரவசத்துடன்,

   

“குட் மார்னிங் மேடம்...” என்றாள்.

   

அவளை ஒரு பார்வை பார்த்த கஸ்தூரி,

   

“ஐ கெஸ் யூ ஆர் சௌபர்ணிகா...”

   

“எஸ் மேடம்... இங்கே இன்டர்ன்ஷிப்க்கு வந்திருக்கேன்...”

   

“குட்... உன்னை போல் இளைய தலைமுறையினருக்கு இந்த துறையில் ஆர்வத்தை பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு...”

   

“தேங்க்ஸ் மேடம்...”

   

“நான் அடுத்ததா ஒரு கட்டுரை எழுதனும்... இது எடுத்தேன் கவிழ்த்தேன்னு செய்யும் விஷயம் இல்லை.. கொஞ்சம் அனாலிசிஸ், ரிசெர்ச் எல்லாம் செய்யனும், உன்னுடைய ஹெல்ப் வேணும்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.