மீண்டும் பலமுறை அன்று இரவு கஸ்தூரியை அழைத்து பார்த்தாள் பதிலில்லை... இரவு சௌபர்ணிகாவிற்கு தூக்கம் வரவில்லை... கஸ்தூரியை நினைத்து கவலையாக இருந்தது...
🌼🌸❀✿🌷
காலையில் அவசரமாக குளித்து வேறு உடை அணிந்துக் கொண்டு தயக்கத்தை உதறி விட்டு, கஸ்தூரியின் ப்ளாட்டிற்கு சென்றாள். மூடி இருந்த கதவை பார்த்து தட்டலாமா வேண்டாமா என்று அவள் யோசிக்கும் போதே,
“சௌபர்ணிகா, நீ என்ன இங்கே செய்ற?” என்ற குரல் கேட்டது.
குரல் வந்த திக்கை பார்த்தவள் அங்கே கோமதியின் தோழி கவிதா நிற்பதை கண்டாள்.
“ஒண்ணுமில்லை ஆன்ட்டி, மேடமிடம் ஒரு விஷயம் கேட்கனும்... அவங்களை இப்போ டிஸ்டர்ப் செய்யலாமான்னு தெரியலை...”
“க்கும்... உங்க மேடம் எங்கே இங்கே இருக்கா? அவள் தான் காலையிலேயே வழக்கம் கிளம்பி போயாச்சே...”
இவர்களுக்கு என்ன தான் வேண்டும் என மனதினுள் கோபப்பட்ட போதும், கஸ்தூரி தான் பயந்தது போல் எதுவும் செய்யவில்லை என்பதில் அவளுக்கு மனதில் ஆறுதலும் ஏற்பட்டது.
அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்தை அடைந்து, கஸ்தூரியின் அறையினுள் சென்றாள்.
கஸ்தூரி மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்தாள். அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள், சௌபர்ணிகாவின் முகத்தில் எதை கண்டாளோ, கண்ணுக்கு எட்டாத சின்ன புன்னகையோடு,
“நேத்தே செய்து முடித்திருக்க வேண்டிய வேலை, பென்டிங்கில் இருந்தது... ஆமாம் நீ நிறைய